கண்டி முஹம்மட் ஹூசைன் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.


ஸ்ரீ லங்கா ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட,

திரு. எம்.எஸ்.முஹம்மட் ஹூசைன் கடந்த  2019-01-18 ஆம் திகதி உயர் நீதி மன்ற அனைத்து  நீதியரசர்களும் அமர்ந்திருந்த சம்பிரதாயபூர்வமான அமர்வின்போது ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதும் முன் ஆசனத்தில் அமர்த்மப்பட்டார்.


அவர், தந்துரை முன்வதுகொடையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.சரிப்தீன், திருமதி சரிப்தீன் தம்பதிகளின் 3ஆவது புதல்வராவார். இவர் தமது ஆரம்ப கல்வியை ஓர் கிராமியப் பாடசாலையில் பெற்றுக்கொண்டதுடன், பின்னர் தந்துர மகாவித்தியாலயத்திலும், கண்டி புனித சில்வஸ்டர்ஸ் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார்.

1975இல் இலங்கை சட்டக் கல்லூரிப் பிரவேசம் பெற்றார். பின்னர் 40 ஆண்டுகளுக்கதிகமாhகச் சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளார். வழக்குihஞாகப் பணியாற்றத் தொடங்கியது முதல் கண்டியிலும், சுற்றுவட்டத்திலுள்ள சிவில், மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களிலும்  முதுநிலை வழக்குரைஞராகவும்,சட்ட ஆலோசகராவும் பணியாற்றியுள்ளார். அவ்வாறே உயர்நீதிமன்ற வழக்குகளிலும், மேன்முறையீட்டு நிதிமன்ற வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார்.

அவர் பல்வேறு அரச அதிகார சபைகளில் சட்டவாதிகள் குழுவின் ஓர் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.அகில இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவாகவராகவும் சேவையாற்றி இருப்பதோடு கண்டி சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக 2017 பெப்ரவரியி;ல் தெரிவானார். அவர் மத்திய மாகாண மற்றும் வடமேல் மாகாண கமநலசேவை மேன்முறையீட்டு மீளாய்வு சபைகளின் தலைவராகவும் பணி புரிந்துள்ளார்.மேலும்; நீதி அமைச்சின் கீழ், கௌரவ பிரதம நீதியரசரின் தலைமையில் இயங்கும், ஸ்ரீ லங்கா நெட் சட்ட நீதிச் சீர்திருத்த (டுயுறுNநுவு);இணையத்தளச் செயற்பாட்டு ஆசிரிய பீட வழிநடத்தற் குழுவில் கௌரவ பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட ஓர் கௌரவ உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.

 இவர் தனது சட்டமுதுமானிப்பட்டத்தை  1998ல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டதோடு, தற்போது தத்துவமாணிகூகலாநிதிப் பட்டங்களுக்கான கற்கைகளைக் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக உயர்தரச்சட்டக் கற்கைக்கான இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வருகைதரு ஆய்வாளர் அந்தஸ்தை இவருக்கு வழங்கியுள்ளது.இவரது ஆய்வானது பொதுநலவாய நாடுகளில் பொது நலன்சார் வழக்குத் தொடர்தல் பற்றியதாகும்.இவரது நீண்டகால ஆய்வின் அடைவானது 'பொது நலன்களைப் பற்றிய நீதிக்கான அணுகல் முரண்பாடுகள்,ஒத்துழைப்பு மற்றும் சமரசம் பற்றிய கோட்பாட்டணுகு முறை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி வேலைகளைப் பயன்படுத்தியமையாகும்.

       2005ஆம் ஆண்டில் அவரால் வெளியிடப்பட்ட 22 வொலியூம்களைக் கொண்ட நினைவுச்சி;ன்னமான 'ஹூசைனின் இலங்கையின் முழுமையான வழக்காய்வுச் சுருக்கச் சட்டத்தொகுப்பு (1820-2000) (58) தொடர்களாக வெளியிடப்பட்ட அனைத்து வழக்கறிக்கை களையும், மற்றும் வெளியிடப்படாத வழக்கறிக்கைகளையும் உள்ளடக்கியது.)  2000 தொடக்கம் 2008 வரையிலான துணைப் பிரிவின் 1ஆம் 2ஆம் பகுதிகள்;; 2009இல் வெளியிடப்பட்டன.

இச் செயற் திட்டம் 2009லிருந்து 2018 வரை நீடிக்கப்பட்டதனால் 3ஆம் 4ஆம் பகுதிகள்  25ஆம் 26ஆம் வொலியூம்கள் 2018ஆம் ஆண்டில்  வெளியிடப்பட்டன.

வழக்குத் தீர்ப்புகளின்போது இந்நூல்கள் நீதிபதிகளினால் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என நீதிச் சேவை ஆணைக்குழுவினால்; சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தப்;பட்டுள்ளது.


 முன்னர் வெளியிடப்பட்ட முழுமையான வழக்காய்வுச் சட்டச் சுருக்கத் தொகுப்பின் (1978-1990) 5 வொலியூம்களும்,  சிங்கள மொழியில் பிரசுரிக்கப்பட்டதும், தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுமான 'மாகாண சபைகள் தொடர்பான சட்டம்' என்ற நூலும் பிரசுரிக்கப்பட உள்ளன.அவரால் ஏற்கனவே அகரவரிசையில் தொகுத்துப்  பிரசுரிக்கப்பட்ட இலங்கையின் சட்டவாக்க விதிகள்(1799-டிசம்பர்-2000); என்ற நூல் இன்று வரையிலான அதிகமான விபரங்களுடன் பிரசுரிக்கப்படவுள்ளன.


கண்டி முஹம்மட் ஹூசைன் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம். கண்டி முஹம்மட் ஹூசைன் அவர்கள்  ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம். Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.