பங்களாதேஷ் ஹெரோயின் கடத்தல் காரர்கள் வாடகைக்கு இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டன..



இலங்கை வரலாற்றில் பிடிக்கப்பட்ட அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதிக்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றால்

ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் 2 சந்தர்ப்பங்களில் 336 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தெஹிவளை பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தன.


இதுதொடர்பில் பங்களாதேஷ் நாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன், இலங்கையிலும் பங்களாதேஷ் நாட்டவர்கள் உட்பட பலர் கைதாகி இருந்தனர்.


இந்த வழக்கு விசாரணையின் போது குறித்த போதைப் பொருள் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாடகைக்கு வழங்கப்பட்ட  தெஹிவளை பகுதியில் உள்ள இரண்டு  வீடுகளையும் அதன் உண்மையான உரிமையாளருக்கு வழங்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டப்பட்டுள்ளது.


முஸ்லிம் நபர்களுக்கு சொந்தமான குறித்த வீடுகள் நீதிமன்றத்தினால் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டு உரிமையாளர்கள் சார்பில் வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ரமீஸ் பஷீர் குறித்த ஹெரோயின் வர்த்தகத்தினருக்கும் வாடகைக்கு வழங்கிய வீட்டு  உரிமையாளர்களுக்கும் எந்த தொடர்பும் என்பதை நீதிமன்றில் நிரூபித்ததை அடுத்து வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பங்களாதேஷ் ஹெரோயின் கடத்தல் காரர்கள் வாடகைக்கு இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டன.. பங்களாதேஷ் ஹெரோயின் கடத்தல் காரர்கள் வாடகைக்கு இருந்த  வீடுகள் விடுவிக்கப்பட்டன..  Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.