2020 இல் கொழும்பில் 20000 வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்..



அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக
செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிடார். 

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அதனூடாக போதைப்பொருளை நாட்டைவிட்டு இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

மாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 384 வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆயிரத்து 536 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

வங்குரோத்து அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை அரசியல் உதைபந்தாட்டமாக்குவதற்கு எண்ணுகின்றனர். அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் அதனை குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

கொழும்பு மாநகரின் சேரிப்புறங்களில் வாழும் சகல மக்களுக்கும் இந்த அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டை எட்டும்போது கொழும்பு மாநகரில் 20 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அரச தகவல் திணைக்களம்
2020 இல் கொழும்பில் 20000 வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.. 2020 இல் கொழும்பில் 20000 வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.. Reviewed by Madawala News on February 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.