மேலதிக விளக்க மறியல்



கடந்த ஜனவரி இருபத்தொன்பதாம் திகதி கிண்ணியா கீரைத்தீவில் அன்றாட
வயிற்றுப்பாட்டுக்காக யாரோ ஒரு முதலாளிக்காக மண் அகழச்சென்று கடற்படை வீர்ர்களின் அசாதாரணமான சுற்றி வளைப்பின் போது கடற்படை வீர்ர்கள் அச்சமூட்டவதற்தற்காகவும் பயமுறுத்துவதற்காகவும் அந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தியதனையடுத்து அதன் நிமித்தம் பயந்து போய் தமக்கும் சுட்டு விடுவார்களோ என்ற பேரச்சத்தின் காணரமாக அநியாயமாக இரண்டு இளைஞர்கள் கங்கை ஆற்றில் குதித்து அதன் பின்ன்ர் கங்கையின் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்களது உயிரற்ற உடலே தண்ணீருக்குள்ளிருந்து வெளியே எடுக்கப்பட்டிருந்தன. 

இரு இளைஞர்களின் நியாயப்படுத்தவே முடியாத வபாத்தின் காரணமாக ஆயிரக்கணக்கில் உறவுகளும் பொது சனங்களும் ஆவேசப்பட்டு இளைஞர்களது மரணத்துக்கு காரணமான அங்கு நின்ற கடற்படையினரோடு வாக்கவாதப்பட்டு அதன் போது பொது சனங்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் கை கலப்புகள் ஆன பின்னர் அங்க நின்றிருந்த பல கடற்படை வீர்ர்கள் பொலிசில் இது தொடர்பாக முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர். 

பல கடந்படை வீர்ர்கள் இது தொடர்பில் பொலிசுக்கு வாக்குமூலங்கள் வழங்கியிருந்தனர். கடற்படையினரின் முறைப்பாடுகளை பதிந்து கொண்ட கிண்ணியா பொலிசார் அதனடிப்படையில் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற பலரை அதி தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தனர்.  

இதனடிப்படையில்  கடந்த 2019-02-16 சீனக்குடாப் பகுதியைச் சேர்ந்த பைசர் எனும் பெயரடைய ஒருவர் கைது செய்யப்பட்டு கடந்த 2019-02-17ம் திகதி திருகோணமலை கடமை பார்க்கின்ற நீதவான் சுபாஷினி சித்ரவேல் அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜர்படுத்தப்பட்ட போது கிண்ணியா பொலிசார் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பலரை கைது செய்யவிருப்பதாகவும், அதே வேளை தற்போது கைது செய்யப்பட்டவர் தொடர்பில் கட்டாயமாக அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அதன் காரணமாக இருபத்தியெட்டாம் திகதி வரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறும் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் கௌரவ நீதவான் 2019-02-21ம் திகதி வரை குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்த்விட்டார். 

இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நிதிமன்றத்தில் வழக்கானது அழைக்கப்பட்டு அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட்டது. குறித்த அடையாள அணிவகுப்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டவதற்காக எட்டு கடற்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

அடையாள அணிவகுப்பு முடிந்து வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட போது பொலிசார் மற்றும் கடற்படை வீர்ர்கள் சார்பாக ஆஜரான கடற்படை சட்டத்தரணி ஆகியோர் சந்தேக நபருக்க பிணை வழங்கக் கூடாதென்று கடுமையாக தமது எதிரப்பை தெரிவித்தனர். 

அதே நெரம் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு மிகத் தீவிரமாக வாதாடிய போதும் கிண்ணியா பொலிசார் குறித்த வழக்கின் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகவும், அதே போல இந்த வழக்கு தொடர்பில் இன்னும் பலரை கைது செய்ய வேணடியிருப்பதாகவும் அதனால் சந்தேக நபருக்கு பிணை வழங்கக் கூடாதென்று செய்யப்பட்ட விண்ணப்பத்தினையும் கவனத்திற் கொண்டு சநதேக நபர் சார்பாக செய்யப்பட்ட பிணை விண்ணப்பம் கௌரவ நீதவான் அவர்களினால் மறுக்கப்பட்டு சந்தேக நபரை எதிர்வருகின்ற மார்ச் ஏழாம் திகதி வரை விளக்க மறயிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடற்படையினரோடு பொது மக்கள் ஆவேசத்தின் பேராலும் ஆற்றாமை காரணமாகவும் கைகலத்த வழக்கினை இந்தளவு தீவிரமாக புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்ற பொலிசார் அதே கடற்படையினரின் சட்ட முரணான செயல் காரணமாக அநியாயமாக வாழும் வயசில் உயிரைத் தொலைத்து நிற்கின்ற இரு இளைஞர்களின் மரணம் தொர்பில் ஏனித்தனை பெரிய மௌனத்தை காத்து நிற்கின்றனர் என்பதுதான் இமாலயக் கேள்வியாக எழுந்து நிற்கின்றது.  

கிண்ணியா சபருள்ளாஹ்
2019-02-21

மேலதிக விளக்க மறியல் மேலதிக விளக்க மறியல் Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.