மாகந்துரே மதுஷ் விவகாரம் ; அமீரக கலீபாவுக்கு கோரிக்கை சென்றது::மாகந்துரே மதுஷை இலங்கை அழைத்து வர இலங்கை அரச தரப்பு டுபாய் ஆட்சியாளரான
கலீபா பின் சையதுக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஊர்ஜிதமான தகவல் வெளியாகியுள்ளது.

மதுஷ் பற்றி  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அவர்களை இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஜனாதிபதி மைத்ரி நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளாரென சொல்லப்படுகிறது. 

டுபாய் ஆட்சியாளரான கலீபா பின் சையத் உடன் நேரடியாகவே பேசி தேவைப்படின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை உடனடியாக செய்யவும் மைத்ரி தயாராகியுள்ளார்.அதற்காக அவர் சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு ஒருபுறமிருக்க -இந்த மதுஷ் நெட்வெர்க்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய புள்ளிகளும் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தை மைத்ரி இலேசாக விடமாட்டார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.


மாகந்துரே மதுஷ் விவகாரம் ; அமீரக கலீபாவுக்கு கோரிக்கை சென்றது:: மாகந்துரே மதுஷ் விவகாரம் ; அமீரக கலீபாவுக்கு கோரிக்கை சென்றது:: Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5