சட்டவிரோத மதுபானம் தொடர்பில் அடுத்தவாரம் விசேட சுற்றுநிருபம் .


சட்டவிரோத மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்தும், விசேட சுற்றுநிருபம் ஒன்றை அடுத்த வாரமளவில்
வௌியிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏதெனும் ஓர் இடத்தில் சட்டவிரோத மதுபானம் காணப்படுமாயின் குறித்த அந்தப் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் ( தமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியும் (OIC) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் (SSP) முழுமையாக பொறுப்பு கூறவேண்டும்)  எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் அடுத்தவாரம் விசேட சுற்றுநிருபம் . சட்டவிரோத  மதுபானம் தொடர்பில் அடுத்தவாரம் விசேட சுற்றுநிருபம் . Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5