வைத்தியசாலை ஊழியர் ஓட்டமாவடி பைரூஸ் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்த
போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று நேற்று (12) ம் திகதி இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக தெரிய வருவதாவது,

வைத்தியசாலையிலிருந்து தனது கடமையினை முடித்துவிட்டு வீடு செல்லும் போதே இவ் விபத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - கும்புறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

எதிரே வந்த காரில் ஆட்டோ மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியசாலை சிற்றூழியர் ஏ.எல்.பைரூஸ் என்பவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை ஊழியர் ஓட்டமாவடி பைரூஸ் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி. வைத்தியசாலை ஊழியர் ஓட்டமாவடி பைரூஸ் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5