அவதானம்... டயலொக் கம்பனி ஊழியர்கள் என பண மோசடி போலி ஊழியர்கள் (ஆண் - பெண்) சிக்கினர்.


அவதானம்... டயலொக் கம்பனி ஊழியர்கள் என பண மோசடி செய்தவர்கள் (ஆண் - பெண்)  சிக்கினர்.

டயலொக் கம்பனி ஊழியர்கள் என தம்மை அடையாளப்படுத்தி, லிந்துலை பகுதியில், பொதுமக்களை ஏமாற்றி  பண மோசடியில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் கைதான மூவரை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை, நுவரெலியா மாவட்ட  நீதிமன்ற நீதவான் பிரமோத ஜெயசேகர நேற்று (14) பிறப்பித்துள்ளார்.

கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் , கண்டி தம்பேவில பிரதேசத்தைச்  சேர்ந்த ஆண்கள் இருவருமே, கைது செய்யப்பட்டு இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

குறித்த மூவரும் கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் 22 மற்றும் 25 வயதுக்குட்டப்பவர்கள்.

இவர்கள், கையடக்க  தொலைபேசிக்கான ஒரு தொகை  4ஜீ   சிம் அட்டைகள்  மற்றும் விண்ணப்பப் படிவங்களுடன்,  கடந்த இரு தினங்களாக நுவரெலிய, நானுஒயா, லிந்துலை ஆகிய பகுதிகளில் விற்பனை  நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

சிம் அட்டைகளை பெற்றவர்களிடம், ரீசார்ச் செய்து தருவதாக கூறி பணம் வசூலித்தும் வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை (13) மாலை, லிந்துலை நகரில் இவர்களின் செயற்பாடுகளை அவதானித்த   பொதுமக்கள், லிந்துலை பொலிஸாரிக் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து,விசாரணையின் பின்னர் குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

​சந்தேகநபர்கள் தொடர்பில், டயலொக் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டதில்,  இவர்கள் போலியானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், லிந்துலை பகுதிக்கு விநியோகத்தர்களை அனுப்பவில்லை எனவும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதான மூவரும் நேற்று (14) மாலை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டதுடன்,  ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி , நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அவதானம்... டயலொக் கம்பனி ஊழியர்கள் என பண மோசடி போலி ஊழியர்கள் (ஆண் - பெண்) சிக்கினர். அவதானம்... டயலொக் கம்பனி ஊழியர்கள் என பண மோசடி போலி ஊழியர்கள்  (ஆண் - பெண்)  சிக்கினர். Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.