மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் மௌலவிமார்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை ..இதுபோன்ற இனவாத செயற்பாடுகளில் ஈடுபடாமல்  இருக்க மௌலவிமார்கள் பள்ளிவாயல்கள்
ஊடாக முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்த வேண்டும் என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் வலவாஹென்குன்வெவ தம்மரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று முதூர் மாணவர்கள் இருவர் மிகிந்தலை ரஜமஹா விகாரை புராதன தூபி மீது ஏறி படம் எடுத்த போது கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் , 

திட்டமிட்ட ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் ஒரு  செயலாகவே நான் இதனை காண்கிறேன். இன்று வடக்கில் கிழக்கில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ முடியாத நிலை உள்ளது.

இதுபோன்ற இனவாத செயற்பாடுகளில் ஈடுபடாமல்  இருக்க மௌலவிமார்கள் பள்ளிவாயல்கள் ஊடாக முஸ்லிம் சமூகத்தை அறிவுறுத்த வேண்டும் என நான் கோரிக்கை முன்வைக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் மௌலவிமார்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை .. மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் மௌலவிமார்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை .. Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5