ஜனாஸா அறிவித்தல் : புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் MH. அபுல்காசிம்


புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் MH. அபுல்காசிம்
  JP அவர்கள் இன்று காலை 5 :20 மணியளவில் காலமானர்கள் 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


என்னேரமும் பள்ளியிலேயே தனது இறுதி காலத்தை கழித்த ஒரு மனிதர் , பதுறியா ஜும்மாஹ் பள்ளியில் நாங்கள் அறிந்த காலம் தொட்டு அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தொழுகையாளியாகவும் அந்த பள்ளியின் நிருவாகத்தில் பல கோணத்தில் இருந்து அந்த பள்ளியின் கட்டுமான பணியில் முழுமையாக ஈடுபட்ட ஒரு நல்ல மனிதர் 

அதனாலோ என்னவோ அழ்ழாஹ் அவர்களை இறுதி வரை அந்த பள்ளியின் ஆயுட்கால தலைவர் என்ற ஒரு அந்தஸ்தை கொடுத்துள்ளான்

அவர்களின் இழப்பு  பொதுவாக அவர் குடும்பத்துக்கும் எமது பகுதிக்கும் பேரிழப்பே
இருந்தும் அழ்ழாஹ்வின் வாக்கு உண்மையானது    ;  (كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌   وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏ 
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; 
(அல்குர்ஆன் : 21:35)  என்ற வாக்கியத்துக்மைய
அவர்களின் இம்மைய வாழ்வை இறைவன் பொருந்திக் கொண்டு மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை கொடுத்திட இறையஞ்சுகிறேன்  : ஆமீன்

ஜனாஸா தொழுகை இன்ஷாஅல்லாஹ் இன்று அஸர் தொழுகையின் பின் பதுறியா ஜும்மாஹ் பள்ளியில் இடம்பெறும்

அன்னாரின் மறுமை வாழ்வை அழ்ழாஹ் பொருந்திக் கொள்வானாக:  ஆமீன்

தகவல் : சஜா ரம்லான்
ஜனாஸா அறிவித்தல் : புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் MH. அபுல்காசிம்  ஜனாஸா அறிவித்தல் : புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆயுட்கால தலைவர் அல்ஹாஜ் MH. அபுல்காசிம் Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5