மிளகு , சாதிக்கா, கருங்கா , கறுவா பட்டை இறக்குமதி செய்ய தடை !!இறக்குமதி மிளகு மற்றும் கறுவா இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்தல் இறக்குமதி சாதிக்கா
மற்றும் புளி பாகிஸ்தானுக்கு மீள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இலங்கையின் கறுவாவை மோசடியான வகையில் ஏற்றுமதி செய்தல் போன்ற காரணங்களினால் உள்ளுர் பலசரக்கு மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட தயாரிப்பு தொழிற்துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏற்றுமதியை திட்டமிடுவதற்காக தற்காலிக இறக்குமதியை மேற்கொள்ளுதல் வர்த்தகம் மற்றும் வணிக கேந்திர நிலையமாக முன்னெடுத்தல் போன்ற நடைமுறையின் மூலம் இலங்கைக்கு மிளகு சாதிக்கா புளி மற்றும் கறுவா இறக்குமதியை இடைநிறுத்துவதற்கும் இலங்கையிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படும் மேலே குறிப்பிடப்பட்ட இறக்குமதி பலசரக்கு இலங்கை தயாரிப்பாக பதிவாவதை தடுப்பதற்கு தேவையான மூல உபாயம் ஒன்றை நிலைநிறுத்துவதற்கும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்கிரம அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மிளகு , சாதிக்கா, கருங்கா , கறுவா பட்டை இறக்குமதி செய்ய தடை !! மிளகு , சாதிக்கா, கருங்கா , கறுவா பட்டை இறக்குமதி செய்ய தடை !! Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5