எமது நாட்டில் கிரிக்கெட் என்பது மதம் போன்றது. அது 2015ஆம் ஆண்டிலிருந்து அழியத் தொடங்கியது.


இலங்கையின் கிரிக்கெட் துறையை அழித்த நபர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேடையிலிருந்து
கீழே இறங்கும் காலம் வந்துள்ளதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் கிரிக்கெட் என்பது மதம் போன்றது. அது 2015ஆம் ஆண்டிலிருந்தே அழியத் தொடங்கியது. அதற்கு வீரர்களை மாத்திரம் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அதற்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்கும் தகுதியற்றவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

தற்போது கிரிக்கெட் துறையின் வீழ்ச்சிக் குறித்து ஜனாதிபதி புரிந்துக்​கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் இன்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் ஜனாதிபதியின் மேடையில் இருக்கின்றனர். எனவே அவ்வாறானவர்களை தனது அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம் என தான் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் கிரிக்கெட் என்பது மதம் போன்றது. அது 2015ஆம் ஆண்டிலிருந்து அழியத் தொடங்கியது. எமது நாட்டில் கிரிக்கெட் என்பது மதம் போன்றது. அது 2015ஆம் ஆண்டிலிருந்து  அழியத் தொடங்கியது. Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.