படங்கள்) கத்தார் வாழ் பொத்துவில் சகோதரர்களின் ஒன்றுகூடலும், புதிய நிர்வாக சபை தெரிவும்.


வெளிநாடுகளில் பணி புரிகின்ற பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களின் நலன் பேணும்
நோக்கோடு உருவாக்கப்பட்டு பல்வேறான சமூக நல செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அமைப்பான “PFIF” (Pottuvil Foreign Islamic Foundation) இன் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு கத்தாரில் நடைபெற்றது.

கடந்த பல வருடங்களாக பொத்துவில் பிரதேச அபிவிருத்தி, பொருளாதார ஊக்குவிப்புகள், சமூகநல விடயங்கள், அரசியல், கல்வி போன்ற பல்வேறு செயற்பாடுகளில் தம்மை முனைப்போடு ஈடுபடுத்திவரும் இவ்வமைப்பானது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற சகோதரர்களின் நலன்களை பேணுவதில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் அடிப்படையில் இவ்வமைப்பின் பெரும்பாலான அங்கத்தவர்களை கொண்டமைந்ததும் பிரதான இயங்குதளமாகவும் காணப்படும் கத்தார் நாட்டிலே பணிபுரிகின்ற சகோதரர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது கடந்த 12ம் திகதி கத்தார் பாரம்பரிய விளையாட்டுக்கள் தின விடுமுறை நாளன்று கத்தார் சைனியா பொதுவெளியில் நடைபெற்றது.

குறித்த ஒன்றுகூடல் நிகழ்வின் போது, அமைப்பின் கடந்த கால வேலைத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுன் கடந்தவருட கணக்கறிக்கை உட்பட பல்வேறு விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

குறிப்பாக புதிய நிர்வாகமானது இளம் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டு பல்வேறு செய்றாபாடுகளிலும் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்படதற்கிணங்க புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது. அதன் படி,

தலைவர் : M.A.M.ஜஹான்
செயலாளர் : B.M.சப்லின்
பொருளாளர் : M.M.S.M.மாஹிர்
ஊடகம் மற்றும் பொது தொடர்புகள் : T.நபான்
உபதலைவர் : U.L.நௌசார்
உபசெயலாளர் : M.M.M.ரிபாஸ்
உபபொருளாளர் : M.I.ஹில்மி

நிருவாக குழு உறுப்பினர்கள்:
A.M.ஜன்னதுல் பிர்தௌஸ்
M.H.M.சியாத்
A.G.M.ஜெக்கீம்
V.T.M. இம்றாத்
A.B.A.அஸீஸ்
M.S.இல்யாஸ்
F.இஷாக்
M.M.சமீர்
M.M. அக்ரம்
M நியாஸ்

ஆலோசனைக்குழு:
A.C.நியாஸ்
M.H.இம்தியாஸ்
A.H.ஜெசார்
A.ரமீஸ்
J.நிஸார்
AR. முனாஸ்
போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக சபை தெரிவை தொடர்ந்து ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பகல்போசண நிகழ்விலும் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள்) கத்தார் வாழ் பொத்துவில் சகோதரர்களின் ஒன்றுகூடலும், புதிய நிர்வாக சபை தெரிவும். படங்கள்) கத்தார் வாழ் பொத்துவில் சகோதரர்களின்  ஒன்றுகூடலும், புதிய நிர்வாக சபை தெரிவும். Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.