தாயுடன் 'பழகி' வந்த நபரால் , மகள் ( 9 வயது பாடசாலை மாணவி) பாலியல் துஷ்பிரோயகம். #மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி.


திருகோணமலை - தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை பாலியல்
துஷ்பிரோயகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ - தெவனிபியவர பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் தந்தை தாயை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் , மாணவி தாயுடன் வாழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் , மாணவியின் தாயுடன் பழகி வந்த நபரொருவர் , அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் நிலையில் , தாய் இல்லாத நேரத்தில் மாணவியை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயுடன் 'பழகி' வந்த நபரால் , மகள் ( 9 வயது பாடசாலை மாணவி) பாலியல் துஷ்பிரோயகம். #மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி. தாயுடன் 'பழகி' வந்த நபரால் , மகள்  ( 9 வயது பாடசாலை மாணவி) பாலியல் துஷ்பிரோயகம். #மாணவி  திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5