820 கிலோ பீடி இலைகளை மீட்ட போலீசார்.


 820 கிலோ பீடி இலைகளை மீட்ட போலீசார்.

மன்னார், அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை பீடி சுற்றும் இலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக் கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.

எனினும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாததுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
820 கிலோ பீடி இலைகளை மீட்ட போலீசார்.  820 கிலோ பீடி இலைகளை மீட்ட போலீசார். Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5