12 நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச கலைஞர்கள் ஆளுநர் அசாத் சாலியை சந்தித்து கலந்துரையாடல்.


12 நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச கலைஞர்கள் இலங்கைக்கான நலன்புரி நடவடிக்கைகளை
முன்னெடுத்துச் செல்வதற்காக பணிகளில் ஒரு பகுதி பூர்த்தியடைந்துள்ளதாக உறுதியளித்தனர்.


சர்வதேச கலைஞர்களின் குழுத்தலைவர் துபாயில் இருந்து வந்திருந்த ஜோஷிதா அஹ்மத், மேல் மாகாண ஆளுநர் எம்.அசாத் எஸ். சாலி புதனன்று ஆளுநர் அலுவலகத்தில் நடத்திய விருந்துபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.

தேசிய கலாபவனத்தில் 20 ஆந் திகதி நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஓவியக் கண்காட்சியில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்தார். இதன் போது ஜக்கிய இராச்சியத்திற்காக தூதுவர் அஹ்மத் இப்ராஹிம் அல் – முல்லா அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நாட்டிலுள்ள சுற்றுலா மற்றும் பண்பாட்டு நலன்களைப் பார்வையிடும் குழுவினரின் இலங்கைக்கான விஜயத்தின் போது அவர்களின் இலங்கை மீதான எண்ணங்கள் தொடர்பாக, அவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் இக் கண்காட்சியில் இடம் பெறும். இச் சித்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு பெற்றபடும் பணம் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளிற்காக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


சர்வதேச கலைஞர்களின் விஜயமானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒரு முக்கிய ஊக்குவிப்பாக அமைவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிற்கு ஆளுநர் நன்றி செலுத்தியதோடு இந் நடவடிக்கையானது அழகியல் ஆர்வலர்களிற்கு முன்னுதாரணமான செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.


ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வருகை தந்த பாத்திமா அல் – ஹமாடி அவர்கள் இலங்கையானது அழகிய இயற்கை எழில்கொண்டதாக இருப்பது வியப்பாக உள்ளதாக கூறினார். அவர் இலங்கையில் இடங்களை சித்தரிக்கும் மூன்று ஓவியங்களையும் முன்வைத்தார்.


சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஹயத்தம் அல்டோசரி குறிப்பிடுகையில்இலங்கை ஒரு விபரிக்கமுடியாத அழகு கொண்ட நாடென குறிப்பிட்டதோடு,   நாட்டின் அழகை உணர முடிவதாகவும் கூறினார்.
12 நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச கலைஞர்கள் ஆளுநர் அசாத் சாலியை சந்தித்து கலந்துரையாடல். 12 நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச கலைஞர்கள் ஆளுநர் அசாத் சாலியை சந்தித்து கலந்துரையாடல். Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.