கண்டியில் 116 கிராமங்களை உள்ளடக்கி, 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை.


தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள குடிநீர்
வழங்கல் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (09) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்டுகஸ்தோட்டை, வெகாகொட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலம் கண்டி மாவட்டத்தில் 116 கிராமங்களை உள்ளடக்கியதாக 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 380.7 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் 11,302 குடும்பங்களைச் சேர்ந்த 51,635 பேர் நன்மையடையவுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயதில ஹேரத், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் எம்.எச்.எம். சல்மான், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி. சில்வா, பிரதி பொது முகாமையாளர் மீகொட மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கண்டியில் 116 கிராமங்களை உள்ளடக்கி, 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை. கண்டியில் 116 கிராமங்களை உள்ளடக்கி, 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை. Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.