மேலும் ஐந்து வருடங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருங்கள். தேரரின் வேண்டுகோள்.


மேலும் ஐந்து வருடங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை பதவி வகிக்குமாறு,
மல்வத்து விகாரையின் அநுநாயக்க தேரர் இம்புல்கும்புரே ஸ்ரீ சரணாங்கர விமலதம்மாஹிதான தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதிலுள்ள 60 விகாரைகளுக்கு, வணக்கஸ்தல காணி உரித்தை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஜனாதிபதி தங்களின் பதவிக்காலத்தில் 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. மீதமிருப்பது 1 வருடமே. எனினும் அந்த ஒருவருடத்தின் பின்னரும் தாங்களே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக தங்களுக்கு வல்லமை கிடைக்கவேண்டுமென பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் எட்வேர்ட் குணசேகர, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.எச்.கருணாரத்ன ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் ஐந்து வருடங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருங்கள். தேரரின் வேண்டுகோள். மேலும் ஐந்து வருடங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருங்கள். தேரரின் வேண்டுகோள். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5