இராணுவ டிரக் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் ஸ்தலத்தியே உயிரிழப்பு.


இராணுவ டிரக் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்
 மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று மாலை இந்த  விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில்  இடம்பெற்ற இந்த  கோர விபத்திலேயே  மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தாயைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ டிரக் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் ஸ்தலத்தியே உயிரிழப்பு. இராணுவ டிரக்  மற்றும் முச்சக்கரவண்டி  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் ஸ்தலத்தியே  உயிரிழப்பு. Reviewed by Madawala News on January 08, 2019 Rating: 5