எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை பொது வேட்பாளராக போட்டியிட அழைத்தால் அதனை ஏற்றுக் கொள்வேன்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை  பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை
ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று அரசியல் நிகழ்ச்சி நிரலை கவனத்திற் கொள்ளாது தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் செயற்படுவது மிகப்பெரிய குறைபாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொது வேட்பாளாராக செயற்படுவதற்கான அனைத்து அனுபவங்களும் தனக்கு இருப்பதாகவும், அதனால் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தனக்கு உணர்வு இருப்பதாகுவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலில் இருக்கும் சிக்கல்கள் தொடர்பில் தனக்கு நன்கு அனுபவம் இருப்பதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறான பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை பொது வேட்பாளராக போட்டியிட அழைத்தால் அதனை ஏற்றுக் கொள்வேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை பொது வேட்பாளராக  போட்டியிட அழைத்தால் அதனை ஏற்றுக் கொள்வேன். Reviewed by Madawala News on January 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.