நாட்டில் உள்ள உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண், பெண் கைதிகள் தொகை வெளியானது.


2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை
விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

அவர்களில் 1215 ஆண் கைதிகளும் 84 பெண் கைதிகளும் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.

மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 1299 கைதிகளுள் 789 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தமது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 476 பேர் இருப்பதாகவும், அவர்களில் 426 பேர் ஆண்கள் என்றும் 50 பேர் பெண்கள் என்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
நாட்டில் உள்ள உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண், பெண் கைதிகள் தொகை வெளியானது. நாட்டில் உள்ள உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண், பெண் கைதிகள் தொகை வெளியானது. Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5