அலவத்துகொடை, இயால்காமம் மக்கள் அக்குரணை பிரதேச சபையின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் .


 (மொஹொமட்  ஆஸிக்)​​
அக்குறணை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  அலவத்துகொடை  இயால்காமம்  மக்கள் இன்று 11
ம் திகதி அலவத்துகொடை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடு பட்டனர்.

அக்குறணை பிரதேச சபையினால் இயால்காமம்  பிரதேசத்தில் நடாத்தப்படும் கொம்போஸ்ட் தயாரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயால்காமம்  மக்கள் இன்று 11  ம் திகதி அலவத்துகொடையில் அமைந்துள்ள அக்குறணை பிரதேச சபையின் முன்னால் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடு  பட்டனர்.


இயால்காமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடையாக வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் அலவத்துகொடை நகருக்கு சமூகம்தந்து பிரதேச சபை  அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டதில்  ஈடு பட்டனர். இவ் ஆரப்பாட்டதில் சிறுவர்கள் உற்பட நூற்றுக் கனக்கானோர்  கலந்து கொண்டனர்.


இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் கருத்து தெரிவிக்கையில், இயால்காமத்தில் நடாத்தப்படும் கொம்போஸ்ட் தயாரிக்கும் நிலையத்தை  உடன் மூடி விடுமாரு அதிகாரிகளை  வட்புருத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதாக தெரிவித்தனர்.


இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அக்குறணை பிரதேச சபையின தலைவர் ஐ.எம். இஸ்திஹார் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் இயால்காமம் கொம்போஸ்ட் தயாரிக்கும் நிலையம் தொடர்பாக தன்னாள் எடுக்க கூடிய நடவடிக்கைகளை   அவர்ளுக்கு விளக்கி கூறி உள்ளதாகவும் அதனையும் மீறும் பட்சத்தில் இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.


அலவத்துகொடை, இயால்காமம் மக்கள் அக்குரணை பிரதேச சபையின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் . அலவத்துகொடை, இயால்காமம் மக்கள் அக்குரணை பிரதேச சபையின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் . Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5