நெல்லிகல தம்மரத்ன தேரரின் கருத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் SLTJ மறுப்பு





அன்மைய மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
உண்மையில் குறித்த செயலை யார் செய்திருந்தாலும் கடும் கண்டனத்திற்குறிய செயல் என்பதுடன் குறித்த செயலில் ஈடுபட்டவர்களை விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவே அறிவித்திருந்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

மாவனல்லை சிலை உடைப்பு விவாகாரத்தில் சந்தேக நபர்களின் வாக்கு மூலம் பெறப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள்.

இந்த நிலையில் குறித்த செயலை அன்மையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்ட சிலரால் உறுவாக்கப்பட்ட அமைப்பினரே மேற்கொண்டுள்ளனர் என்று தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தனக்கு கூறியதாக நெல்லிகல தம்மரத்ன தேரர் கருத்து தெரிவிக்கும் வீடியோவின் ஒன்றின் சிறு பகுதி சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மையில் குறித்த தேரருக்கு இப்படி ஒரு கருத்தை ஒரு போதும் தவ்ஹீத் ஜமாஅத் தெரிவிக்கவில்லை. குறித்த தேரருடன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்த வித தொடர்பும் இருந்ததுமில்லை. இவ்வாறிருக்க தவ்ஹீத் ஜமாஅத் சொன்னதாக பரப்பப்படும் கருத்தை நாம் (SLTJ) முற்று முழுதாக மறுக்கிறோம் என்பதை உத்தரவாதத்துடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

அதே நேரம் குறித்த தேரர் முஸ்லிம்கள் மீது நல்லென்னம் வைத்துள்ளவர் என்பதுடன், திகனை பிரச்சினையின்போது முஸ்லிம்களுக்கு உதவியர். இவர் இவ்வாரான கருத்தை கூறியதாக பரவுவது உண்மையில் எமக்கு வேதனை அளிக்கிறது.

அத்துடன் இது விடயத்தில் சமூக வலை தளங்களில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக கருத்துக்களை பரிமாறும் சகோதரர்கள் பின்வரும் திருமறை வசனத்திற்கு அமைவாக கருத்துக்களை பரிமாறுவதுடன், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சம்பந்தமில்லாத பொய்யான தகவல்களை பரப்பி மறுமை வாழ்க்கையை வீனாக்கிக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நம்பிக்கை கொண்டேரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமூகத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருக்க அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.(இல்லையேல்) நீங்கள் செய்ததற்காக கவலைப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49 : 06

இப்படிக்கு
எம். எப். எம் பஸீஹ் MIsc
செயலாளர்,
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
நெல்லிகல தம்மரத்ன தேரரின் கருத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் SLTJ மறுப்பு நெல்லிகல தம்மரத்ன தேரரின் கருத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் SLTJ மறுப்பு Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.