4 வருடங்களில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்கு ஆணைக்குழு !


சுகா­தார அமைச்சில் கடந்த நான்கு வரு­டங்­களில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் ஆணைக்­குழு
அமைத்து விசா­ரணை மேற்­கொள்ள ஜனா­தி­பதி இணக்கம் தெரி­வித்துள்ளதாக அரச வைத்திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யி­ருந்­தது.

குறித்த சந்­திப்பு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், சுகா­தார அமைச்சில் கடந்த நான்கு வரு­டங்­களில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்­பாக பல முறைப்­பா­டுகள் எங்­க­ளுக்கு கிடைக்கப் பெற்­றி­ருக்­கின்­றன. அது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் கூடு­த­லான கவனம் செலுத்­தி­யி­ருந்தோம். அதே­போன்று நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள மருந்துத் தட்­டுப்­பாடு தொடர்­பா­கவும் ஜனா­தி­ப­திக்கு எடுத்துக் கூறினோம்.

மேலும், அர­சாங்கம் கைச்­சாத்­திட்­டுள்ள சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை தொடர்­பா­கவும் நாங்கள் ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றினோம். சிங்­கப்பூர் உடன்­ப­டிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முன்னர் தேசியக் கொள்­கை­யொன்றை தயா­ரிப்­பதன் அவ­சியம் குறித்து ஜனா­தி­ப­திக்கு விளக்­கினோம். எமது கோரிக்­கைகள் தொடர்பில் மிகவும் அவ­தா­ன­மாக செவி­சாய்த்த ஜனா­தி­பதி, சிங்­கப்பூர் ஒப்­பந்தம் தொடர்­பாக ஆராய்ந்து பார்க்க ஜனா­தி­ப­தியின் செய­லா­ளரின் கீழ் மேல­திக செய­லாளர் ஒரு­வரை நிய­மிப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார்.

அத்­துடன் சுகா­தார அமைச்சில் கடந்த நான்கு வரு­டங்­களில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்­பாக விசா­ரணை நடத்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைப்­ப­தற்கும் இணக்கம் தெரி­வித்தார். இன்று திங்­கட்­கி­ழ­மைக்குள் வர்த்­த­மானி ஊடாக அது தொடர்பில் அறி­விக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் எம்­மிடம் குறிப்­பிட்டார்.

எனவே, சுகா­தார அமைச்சில் கடந்த நான்கு வரு­டங்­களில் இடம்­பெற்ற ஊழல்கள் தொடர்­பாக ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­படும் பட்­சத்தில், சுகா­தர அமைச்சில் இடம்­பெற்ற மோசடிகள் தொடர்பாக நாங்கள் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கின்றோம். அத்துடன் கடந்த காலங்களில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஊடாக இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் வெளிப்படுத்துவோம் என்றார்.
-Vidivelli.


4 வருடங்களில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்கு ஆணைக்குழு ! 4 வருடங்களில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற  மோசடிகள் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்கு ஆணைக்குழு ! Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.