பொதுஹர சிலை உடைப்பு வழக்கில் மாவனல்லை வாலிபர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்..




குரு­ணாகல் , பொது­ஹர பகு­தியில்  உரு­வச்­சி­லைகள்  உடைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில்
சந்­தேக நபர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள, மாவ­னெல்லை, கண்டி சிலை உடைப்பு விவ­கார சந்­தேக நபர்கள் 7 பேரும் நேற்று பொல்­க­ஹ­வல நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது பொது­ஹர சம்­பவம் தொடர்பில் அந்த ஏழு பேரையும் எதிர்­வரும் 23 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க பொல்­க­ஹ­வல நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதி­காலை பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல பகு­தியில் இருந்த உருவச் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் பொது­ஹர பொலிசார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.இந் நிலையில் ஏற்­க­னவே கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடுப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில் 2 பாதை­யோர புத்தர் சிலைகள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தன. இது தொடர்பில் மாவ­னெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், 2018 டிசம்பர் 26 ஆம் திகதி அதி­காலை 3.00 மனி­ய­ளவில் வெலம்­பொட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­தலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டது. அதனை அண்­டிய பகு­தியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந் நிலையில் அதே திக­தியில் அதி­காலை 4.00 மணி­ய­ளவில் மாவ­னெல்லை திது­ரு­வத்த சந்­தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் வந்­த­தாக கூறப்­படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் பிடித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். அதன் பின்­ன­ரேயே இந்த சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் மேலும் 6 பேரை பொலிசார் கைது செய்­தனர்.

அவர்­க­ளிடம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த கேகாலை மாவட்ட குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொலிஸ் அதி­கா­ரிகள், சந்­தேக நபர்கள் ஏழு பேரும் தேடப்­படும் மேலும் இரு சந்­தேக நபர்­களும் இணைந்து சிலை உடைப்பு சம்­ப­வங்­களை அரங்­கேற்­றி­யுள்­ள­தாக மாவ­னெல்லை நீதி­வா­னுக்கு அறி­வித்­தி­ருந்­தனர். 

அத்­துடன் அவர்கள் பொது­ஹர உருவச் சிலை உடைப்பு விவ­கா­ரத்­திலும் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக கூறிய நிலை­யி­லேயே, நேற்று அவர்கள் பொது­ஹர சம்­பவம் தொடர்பில் பொல்­க­ஹ­வல நீதிவான் முன் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதன்­போதே அவர்­களை எதிர்­வரும் 23 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. ஏற்­க­னவே மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா கடந்த ஜனவரி 2 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli_

பொதுஹர சிலை உடைப்பு வழக்கில் மாவனல்லை வாலிபர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்.. பொதுஹர சிலை உடைப்பு வழக்கில் மாவனல்லை வாலிபர்களுக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்.. Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.