திருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம்



திருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம்
மகளிர் மகா வித்தியாலயம் தரமுயர்த்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் திருகோணமலை பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அபாயா பிரச்சினை தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை அடுத்து திருகோணமலையில் முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஒன்றை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நான் கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த மேற்கொண்ட முயற்சியினால் தற்போது இந்த பாடசாலையை கிழக்கு மாகாணத்திலிருந்து விடுவிப்பதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் இந்த பாடசாலையை மத்திய அரசில் உள்வாங்கி தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் திருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.