கிழக்கு மாகாண ஆளுநர் நியமனமும், இனவாதிகளின் ஹர்த்தாலுக்கான அழைப்பும்.


- எம்.ரீ. ஹைதர் அலி -
வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக
முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். என்ற உண்மை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும்.

வட மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் முகமாக தமிழர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட முஸ்லிம் மக்களை கௌரவிக்கும் முகமாக முஸ்லிம் ஒருவரும் ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.

மதத்தினால் இருவரும் வேறுபட்டாலும், மொழியினால் இவர்கள் இருவரும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த ஆளுநர்கள் என்ற வரலாற்றினை அரியாத சிலர் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தங்களது இனவாத குரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை சில குறிப்பிட்டு சொல்லக்கூடிய தமிழ் தலைமைகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளுபவர்களால், ஊடகங்களிலும், முகநூல்களிலும் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாண ஆளுநராக கடமையேற்றுள்ள கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் தனது மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் தனது சேவையினை வழங்குவதற்கு முன்னரே நீங்கள் உங்களின் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்பெற போகின்றன என்பதைகூட அவதானித்து செயற்பட உங்கள் மனங்களில் இடமில்லாமல் இப்போதே இனவாத கருத்துக்கள் பதிந்து விட்டன. 

தான் ஒரு சமூகத்திற்கான ஆளுநராக செயற்படப் போவதில்லை எனவும், இன ஐக்கியத்துடன், ஒற்றுமைப்பட்டு கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுமாறும் தனது ஆளுநருக்கான கடமையினை பொறுப்பேற்ற பின்னர் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. இதிலிருந்தாவது அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்றதைகூட அறிய முற்படாத சுய புத்தியற்ற இனவாதக் கொள்கையினை மாத்திரம் கொண்டு செயற்படும் நபர்களா நீங்கள்.

தமிழ் இனத்தினை அழித்தவர்கள் தமிழினத்தின் உரிமையினை பற்றி ஊடகங்களில் பேசுவதுதான் வேடிக்கையாவுள்ளது. உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்தவர்கள் நீங்கள். நீங்கள் உயிருடன் இருப்பதற்காக உங்களின் போராட்டம் என்ற வார்த்தையினை நம்பி வந்த மக்களை காட்டிக் கொடுத்து அழித்தவர்கள் நீங்கள். இன்று நீங்கள் சுகபோக வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இன்றும் உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் சமூகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்களுக்கு இப்போது தேவைப்படுவது, தமிழ், முஸ்லிம் பிரிவினைவாதமே அவ்வாறு பிரிந்து செயற்பட்டால்த்தான் நீங்கள் சாகும்வரை சுகபோகத்தினை அனுபவிக்க முடியும். தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டால் உங்களின் சுகபோக வாழ்க்கைகளும், பதவிகளும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இன்று இனவாதத்தினை தூண்டிவிட்டு அதில் குளிர்காய பார்க்கின்றீர்கள்.

ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமனத்திற்கே கொக்கறிக்கும் நீங்களா வட, கிழக்கை இணைத்து முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை தரப்போகின்றீர்கள். இணைப்புக்கு முன்பே உங்களின் செயற்பாடுகள் இவ்வாறு இருந்தால் இணைத்தால் எவ்வாறு அடிமைப்படுத்தி ஆழ நினைப்பீர்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். வெள்ளிக்கிழமை நாட்களில் முஸ்லிம்களின் விஷேட தினம் என அறிந்து அன்றைய நாட்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடுவார்கள் என்று நன்றாக தெரிந்துகொண்டு நரித்தனத்துடன் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்.

அன்றைய நாளில் உங்களின் ஹர்த்தாலை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் காண்பித்து கிழக்கு மாகாணம் பூராக முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு அனைத்து இன மக்களும் தங்களது எதிர்ப்பினை காண்பித்துள்ளார்கள் என்று பொய்ச்செய்தியினை வடிவமைப்பதற்கு திட்டமிடப்பட்ட நாள்தான் வெள்ளிக்கிழமை.

எனவே, இரு இனங்களுக்கும் இடையில் குழப்பத்தை உண்டு பன்ன நினைக்கும் இவ்வாறான தீய சக்திகளின் விசமிகளின் ஹர்த்தாலினை தோல்வியுறச் செய்வதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்களது வர்த்தக நிலையங்களை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து இவர்களின் இனவாத ஹர்த்தால் செயற்பாட்டினை முறியடிக்க முன்வரவேண்டும்.
- எம்.ரீ. ஹைதர் அலி -

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனமும், இனவாதிகளின் ஹர்த்தாலுக்கான அழைப்பும். கிழக்கு மாகாண ஆளுநர் நியமனமும், இனவாதிகளின் ஹர்த்தாலுக்கான அழைப்பும். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.