(படங்கள்) தாயிப் நகர் மீள்குடியேற்ற கிராமத்திற்குள் புகுந்து பெரும் சேதம் விளைவித்த யானைகள்.


திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், தாயிப் நகர் மீள்குடியேற்ற
கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானைகள் புகுந்துள்ளன.

இதன்போது 60 இற்கும் மேற்பட்ட முந்திரிகை மரங்கள், 25 தென்னை மரங்கள் என்பவற்றை யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தற்காலிக குடிசையொன்றினையும், சுற்று வேலிகளையும் காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ளன.

இந்த பிரதேச மக்கள் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்து மீண்டும் 2009ஆம் ஆண்டு மீள்குடியேறி பயிர்செய்கை செய்து வாழ்ந்து வரும் நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
(படங்கள்) தாயிப் நகர் மீள்குடியேற்ற கிராமத்திற்குள் புகுந்து பெரும் சேதம் விளைவித்த யானைகள். (படங்கள்) தாயிப் நகர் மீள்குடியேற்ற கிராமத்திற்குள் புகுந்து பெரும் சேதம் விளைவித்த யானைகள். Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.