வட­க்கு, கி­ழக்கு இணை­யா­விட்டால் கிழக்கில் இன அழிப்­புக்கு இட­முண்டு.


வட­க்கு, கி­ழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்­களின் பாது­காப்­புக்கும் அவர்­களின் தனித்­து­வத்தைப் பேணவும்
அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. வடக்கு, ­கி­ழக்கு இணை­யா­விட்டால் கிழக்கில் இன அழிப்­புக்கு காலக்­கி­ர­மத்தில் இடம் உண்டு.

அழிக்­கப்­படும் இனம் பாரம்­ப­ரி­ய­மாக நூற்­றாண்­டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இன­மா­கவே இருக்கும் என்று வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

  பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்கும் ஏக்­கிய இராஜ்ய பதம் கொண்ட வட­கி­ழக்கு இணைப்­பற்ற சமஷ்டி அற்ற புதிய அர­சியல் அமைப்பின் வரைவு பற்றி உங்கள் கருத்­தென்ன என்று விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கே அவர் இந்த பதிலை அளித்­துள்ளார்.

அந்த பதிலில் அவர் மேலும் தெரி­வி்­துள்­ள­தா­வது

  அர­சியல் அமைப்பைத் திருத்­து­வ­தற்கு முக்­கிய காரணம் தமிழ் மக்­களின் பல­வ­ருட கால எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வதே என்­பது எமது எண்ணம். ஆனால் இவ்­வ­ருடம் மார்ச் மாதத்­திற்கு முன்னர் தமிழர் சம்­பந்­த­மாக நாம் ஏதோ சில நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கின்றோம் என்று ஜெனி­வாவில் எடுத்துக் காட்டி அர­சாங்­கத்­திற்கு மேலும் தவணை எடுக்க வேண்­டி­யுள்­ளது. எமது எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்தி செய்­வது அவர்­களின் நோக்­க­மல்ல. ஜெனிவா பிரச்­சி­னையில் இருந்து தப்பி விட­வேண்டும் என்­பதே அவர்­களின் அதி­யுச்ச அவா­வாகும் ஆசை­யு­மாகும். . தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைக் களைந்து அவர்­களை நாட்டின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார நீரோட்­டத்­தினுள் அணைத்துச் செல்­வது அர­சாங்­கத்தின் நோக்­காக இருந்­தி­ருந்தால் தொடக்­கத்­தி­லேயே தமிழ் மக்கள் ஏன் பௌத்­தத்­திற்கு முத­லிடம் கொடுக்க முன் வரு­கின்­றார்கள் இல்லை? ஏன் ஏக்­கிய ராஜ்­ய­வுக்கு அவர்கள் எதிர் ஏன் வட­கி­ழக்கு இணைப்பைக் கேட்­கின்­றார்கள் ஏன் சமஷ்டி முறையே சிறந்­தது என்று கூறு­கின்­றார்கள் என்­பதை அலசி ஆராய்ந்­தி­ருப்­பார்கள்.



அது அவர்­களின் நோக்­க­மன்று. சிங்­கள ஏகா­தி­பத்­தி­யத்தைக் காப்­பாற்றி தமிழ் மக்­களைத் தொடர்ந்து தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க என்ன செய்­யலாம் என்­பதே அவர்கள் குறிக்கோள். புதிய அர­சியல் யாப்பு அதற்­கான கண்­து­டைப்பு. அதில் தேர்தல் பற்றி வேறு விட­யங்கள் பற்றி வரு­வது தமி­ழர்­க­ளுக்கு நாம் எதுவும் கொடுக்க இவ்­வ­ரைவைக் கொண்டு வர­வில்லை என்று சிங்­கள மக்­க­ளுக்கு கூறு­வ­தற்­கா­க­வே­யாகும்.


நாம் கேட்கும் எதுவும் கிடைக்­கப்­போ­வ­தில்லை என்ற சிந்­த­னை­யு­ட­னயே தமி­ழர்கள் சார்பில் எமது பிர­தி­நி­திகள் அர­சாங்­கத்­துடன் கருத்துப் பரி­மாறி உள்­ளார்கள் என்­பது போலத் தெரி­கின்­றது. அதா­வது அர­சாங்கம் இந்த அளவு தான் தர முடியும் என்று கூறி­யதை அதா­வது பௌத்­தத்­திற்கு முத­லிடம், ஒற்­றை­யாட்சி, வட­கி­ழக்கு இணைப்­பில்லை, சமஷ்டி இல்லை என்­ப­வற்றை வைத்து அவற்றை எப்­படித் தமிழ் மக்­க­ளிடம் அவர்கள் முகம் சுழிக்­காமல் கொண்டு செல்­லலாம் என்று சிந்­தித்தே நட­வ­டிக்­கை­களில் இறங்கி இருக்­கின்­றார்கள் எங்கள் பிர­தி­நி­திகள் என்­பது கண்­கூடு. சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் “தர­மாட்டோம்” என்­ற­வர்­க­ளிடம் “நீங்கள் தரு­வதைத் தாருங்கள்; நாங்கள் அதை எமது மக்­க­ளிடம் விற்­கின்றோம்” என்று கூறியே இந்த வரைவைப் பெற்­றுள்­ளார்கள் எம்­ம­வர்கள் போலத் தெரி­கின்­றது.



ஏக்­கிய இராஜ்ய என்றால் ஒற்றை நாடு. ஏக்­கிய இர­ஜய என்­பது ஒற்­றை­யாட்சி. சிங்­க­ளத்தில் இராஜ்ய என்­பது நாடு என்று தமிழில் பொருள்­படும். இர­ஜய என்­பது ஆட்சி என்று தமிழில் பொருள்­படும். ஆகவே ஏக்­கிய இராஜ்­ஜிய என்­பது ஒற்றை நாடே ஒளிய ஒரு­மித்த நாடல்ல. ஆனால் ஒற்றை நாட்டை ஒரு­மித்த நாடு என்று குறிப்­பிட்டு எங்கள் மக்கள் பிர­தி­நி­திகள் குழப்­பத்தை விளை­வித்து வரு­கின்­றார்கள். அதா­வது “ஒற்றை” யை “ஒரு­மித்த” என்ற விதத்தில் எமக்கு விற்கப் பார்க்­கின்­றார்கள்!


ஆனால் “ஒரு­மித்த நாடு” என்று கூறும் போது பிரிந்­தி­ருக்கும் அல­கு­களை ஒன்­று­ப­டுத்­திய நாடு என்று பொருள்­படும். அவ்­வாறு ஒன்­று­ப­டுத்­தி­யதை சிங்­க­ளத்தில் “எக்சத் இராஜ்­ஜிய” என்­பார்கள். “ஏக்­கிய இராஜ்­ஜிய” என்று கூற­மாட்­டார்கள்.


நீங்கள் கூறும் விட­யங்கள் பற்றி எம்­மவர் அதிகம் அலட்­டிக்­கொள்­ள­வில்லை என்று தெரி­கின்­றது. அதனால் அர­சாங்­கத்­திற்கு சில விட­யங்­களைத் தெரி­யப்­ப­டுத்­த­வில்லை போல்த் தெரி­கின்­றது.

  எவை எவை எந்த இடத்தில் இருக்க வேண்­டுமோ அந்த இடத்தில் இருப்­பது தான் அதற்­க­ழகு. நாம் வழி பிறழ்ந்தால் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பெரு­நஷ்டம் ஏற்­படும் என்­ப­தற்கு பண்­டாவும் பௌத்த பிக்­கு­களும் உதா­ரணம்.



இதை ஏன் சொல்­கின்றேன் என்றால் நாங்கள் பௌத்­தத்­திற்கு முத­லி­டத்தை அர­சியல் யாப்பில் இடப் போய் புத்த பிக்­குகள் இலங்கை பூரா­கவும் “இது பௌத்த நாடு நாங்கள் எங்கு வேண்­டு­மா­னாலும் புத்த விகா­ரை­களைக் கட்­டலாம்; புத்தர் சிலை­களை அமைக்­கலாம்” என்று கூறி வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் தற்­போது அலைந்து திரி­கின்­றார்கள். அவர்கள் பௌத்­தத்தின் மேல் உள்ள அன்பில் மதிப்பில் இதைச் செய்­ய­வில்லை. சிங்­கள மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்த இவ்­வாறு நடக்­கின்­றார்கள். உள்ளூர் அதி­கா­ர­ச­பை­களின் அனு­மதி பெறா­ம­லேயே அவ்­வாறு கட்­டவும் அமைக்­கவுந் துணிந்து விட்­டார்கள். ஆகவே “இருந்து விட்டுப் போகட்­டுமே” என்று கூறு­ப­வர்கள் வட கிழக்கு மாகா­ணங்கள் பூரா­கவும் பௌத்த சின்­னங்­க­ளையும் புத்த விகா­ரை­க­ளையும் காலக்­கி­ர­மத்தில் எதிர்­பார்க்க வேண்டும். அத்­துடன் அது நின்­று­வி­டாது. விகா­ரையைச் சுற்றி முதலில் பிக்­குமார், அதன்பின் அவர்­களின் “தாயக்­கர்கள்” அல்­லது புர­வ­லர்கள் வீடுகள் அமைப்­பார்கள். குடி­யி­ருக்க வரு­வார்கள். வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் சிங்­கள மக்கள் பிர­சன்னம் கூடும். எமது தனித்­துவம் பறி­போய்­விடும்.


  வட­கி­ழக்கு இணைப்பை ஏன் நாங்கள் கோரு­கின்றோம் என்­பதை எம்­ம­வர்கள் அர­சாங்­கத்­திற்குச் சரி­யாகப் புரிய வைத்­தார்­களோ தெரி­யாது. வடக்கும் கிழக்கும் இப்­பொ­ழுது கூட பெரும்­பான்­மை­யாக தமிழ்ப் பேசும் பிர­தே­சங்­களே. . வவு­னி­யாவில் உள்ள எமது சகோ­தர இனம் நன்­றாகத் தமிழ் பேசு­வார்கள். அவர்கள் தமிழ் மொழி­யு­டனும் தமி­ழர்­க­ளு­டனும் தமிழ் கலா­சா­ரத்­து­டனும் தொடர்­பு­பட்­ட­வர்கள். ஆனால் அண்மைக் காலங்­களில் முல்­லைத்­தீ­விலும் வவு­னி­யா­விலும் குடி­யேற்­றப்­பட்­ட­வர்கள் அப்­ப­டி­யில்லை.


துவேஷம் மிக்­க­வர்கள். தெற்கில் அடி­மட்­டத்தில் இருந்து வந்­த­வர்கள். பலர் குற்­ற­வா­ளி­க­ளாக நீதி மன்­றங்­க­ளினால் ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வைகள் காணப்­பட்­ட­வர்கள் ஆகவே வட கிழக்கு பிரிக்­கப்­பட்டால் சிங்­கள ஆதிக்கம் பெருகும். வட­கி­ழக்கு இணைக்­கப்­ப­டா­விட்டால் கிழக்கு மாகாணம் தமி­ழர்கள் கையில் இருந்து பறி­போய்­விடும்.

1881ம் ஆண்டில் தமி­ழர்கள் 60 சத­வி­கி­தமும் முஸ்­லீம்கள் 35 சத­வி­கி­தமும் சிங்­க­ள­வர்கள் 5 சத­வி­கி­தமும் கிழக்கில் இருந்­தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சத­வி­கி­தத்­துக்குப் பெரு­கி­னார்கள். தமி­ழர்கள் 60 சத­வி­கி­தத்தில் இருந்து 54 சத­வி­கி­தத்­துக்குக் குறைந்­தார்கள். சிங்­க­ள­வர்­களில் மாற்றம் இருக்­க­வில்லை. 5 சத­வி­கி­த­மா­கவே இருந்­தார்கள். முஸ்லீம் மக்­களின் பெருக்கம் வழக்­க­மா­கவே மற்­றைய இனங்­க­ளிலும் பார்க்கக் கூடி­ய­தென்­பதே இதற்குக் கார­ண­மாக இருக்கக் கூடும். பல் தார மணங்கள் அம்­ம­தத்தில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் 1946 தொடக்கம் சிங்­கள மக்­களின் தொகை மிக விரை­வாகப் பெருகத் தொடங்­கி­யது. 1981ல் தமி­ழர்­களின் ஜனத்­தொகை 42 சத­வீ­த­மாகக் குறைந்­தது. முஸ்­லீம்­களின் ஜனத்­தொகை 32 சத­வீ­த­மாகக் குறைந்­தது. சிங்­க­ள­வரின் ஜனத்­தொகை 5 சத­வி­கி­தத்தில் இருந்து 25 சத விகி­தத்­திற்குப் பெரு­கி­யது. இதே­வாறு பெருக்கம் நிலைத்­தி­ருந்தால் 2031ல் சிங்­க­ள­வர்கள் ஜனத்­தொகை 50 சத­வி­கி­த­மாக ஏறி­யி­ருக்கும்.



போர் வந்­ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்­தது. முஸ்­லிம்கள் தொகை 35 சத­வி­கி­தத்­தி­லேயே நின்­றது. ஆனால் தமி­ழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகின்­றது. ஆகவே வட­கி­ழக்கு இணைப்பு தமி­ழர்­க­ளுக்கு மிக அவ­சியம் ஆகின்­றது. இல்­லையேல் அவர்­களின் மொழி, காணிகள், அவர்­களின் அடை­யா­ளங்கள், பாரம்­ப­ரி­யங்கள் எல்­லாமே அழிந்து விடு­வன.


 வட­கி­ழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்­களின் பாது­காப்­புக்கும் அவர்­களின் தனித்­து­வத்தைப் பேணவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னது. வட­கி­ழக்கு இணை­யா­விட்டால் கிழக்கில் இன அழிப்­புக்கு காலக்­கி­ர­மத்தில் இடம் உண்டு. அழிக்­கப்­படும் இனம் பாரம்­ப­ரி­ய­மாக நூற்­றாண்­டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இன­மா­கவே இருக்கும்.

மூன்­றா­வது சமஷ்­டியின் அவ­சியம் பற்­றி­ய­தாகும். இறைமை பகி­ரப்­பட்டு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு இணை­யான சட்­ட­வாக்க அதி­கா­ரத்தைப் பிராந்­தியம் பெற்று, பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப்­பெற முடி­யா­த­படி ஏற்­பா­டுகள் உள்­ள­டக்­கப்­ப­டட போது தான் அங்கு சமஷ்டி உரு­வா­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவு முழு­மை­யான சமஷ்டி ஆட்சி முறை­மையின் அம்­சங்­களைக் கொண்­டுள்­ள­தாகத் தெரி­ய­வில்லை. 2000ம் ஆண்டு சந்­தி­ரிக்கா அம்­மை­யாரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சி­ல­மைப்பு வரைவில் அர­சா­னது மத்­தி­யையும் பிராந்­தி­யங்­க­ளையும் கொண்­ட­தாக அமையும் என்று கூறப்­பட்­டது.


தற்­போ­தைய வரைவில் இலங்கை அதன் அர­சியல் அமைப்பில் உள்ள தத்­து­வங்­களைப் பிர­யோ­கிக்­கின்ற மத்­திய மற்றும் மாகா­ணங்­களைக் கொண்­டி­ருக்கும் எனப்­ப­டு­கி­றது. இதில் மாகாண அர­சாங்கம் எந்­த­ள­விற்கு குறித்த தத்­து­வங்­களை பிர­யோ­கிக்க முடியும் என்­பது கேள்விக் குறி­யாகி இருக்­கின்­றது.


புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவில் தடு­மாற்றந் தருஞ் சொற்­பி­ர­யோ­கங்கள் பெரும்­பான்மை மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டி­ருக்கும் நீதித்­து­றை­யி­ன­ருக்கு பக்கச் சார்­பான தீர்­மா­னங்­களை வழங்க இட­ம­ளிக்கும். நாங்கள் சிங்­க­ள­வ­ருக்கு ஒரு முகம் தமி­ழர்­க­ளுக்கு இன்­னொரு முகம் காட்ட முற்­பட்­டாலும் இந்த வரை­வினால் வரும் பிரச்­சி­னை­களை பெரும்­பான்­மை­யின நீதி­ய­ர­சர்­களே தீர்க்கப் போகின்­றார்கள். அவர்கள் “ஏகிய இராஜ்ய” என்­பது ஒற்­றை­யாட்­சியே என்று தான் கருத்­துக்­கொள்வர். எமது தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் “ஒரு­மித்த நாடு” என்ற கருத்தை ஏற்று கொள்­ள­மாட்­டார்கள். ஆகவே பிறரின் அதி­கா­ரத்­திற்குக் கீழ்ப்­ப­டி­யாமல் எம்மை நாமே ஆள சமஷ்டி முறை தான் ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். இதுவே தந்தை செல்­வாவின் விருப்­பமும். சமஷ்டி எவ்­வாறு சிங்­கள மக்­க­ளுக்குப் பாதகம் விளை­விக்கும் என்­பதைச் சிங்­கள அறி­வி­ய­லா­ளர்கள் எமக்குக் கூற வேண்டும். அவற்­றிற்­கான தக்க பதிலை நாம் தருவோம். உண்­மையில் சமஷ்­டி­யா­னது வெவ்வேறு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.

எது எவ்வாறெனினும் குறித்த வரைவு கூட தற்போது அலமாரியில் வைத்துப் பூட்டியாகிவிட்டது என்றே கொள்ள வேண்டியுள்ளது. நெருக்குதல் இல்லாமல் பெரும்பான்மை சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதுவுமே தர மாட்டார்கள் என்பது கண்கூடு. பிரதமர் இரணில் அவர்கள் அதனை அண்மையில் தெட்டத் தெளிவாக நிரூபித்து விட்டார்.

 மனோ கணேசன் கூறியது போல் சிங்களத் தலைவர்களைத் தமது முன்மொழிவுகளைத் தருமாறு கூறிவிட்டு யாப்பைத் தயாரிக்க நாம் உதவியதை விட்டு விட்டு நாம் வேறு விடயங்களிலேனும் வெற்றி கண்டிருக்கலாம். பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் அரசியல் கைதிகள் விடுதலை பொது மக்கள் காணிகள் விடுவிப்பு படையினரை வடக்கில் இருந்து நீக்குதல் என்று எத்தனையோ விடயங்களை ரணிலுக்கு உதவி தருவதற்கு முன் நிபந்தனையாக இட்டு சாதித்திருக்கலாம். இப்பொழுது யானைக்கு அடிசறுக்கியுள்ளது. அகங்காரத்திற்கு அடி கொடுக்கப்பட்டுள்ளது. சாணக்கியம் சறுக்கிப் போயுள்ளது.

வட­க்கு, கி­ழக்கு இணை­யா­விட்டால் கிழக்கில் இன அழிப்­புக்கு இட­முண்டு. வட­க்கு, கி­ழக்கு இணை­யா­விட்டால் கிழக்கில்  இன அழிப்­புக்கு இட­முண்டு. Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.