(வீடியோ இணைப்பு ) முகம்மத் நியாஸ் என்பவரின் நோயை குணப்படுத்தி, இலங்கை வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனை சத்திர சிகிச்சை.


 பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் நியாஸ் என்ற 56 வயதுடைய   நபர் ஒருவருக்கு தொண்டைக்கு
அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

எனினும் குறித்த நபருக்கு எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல், அந்த புற்றுநோயை அகற்றுவதற்கு இலங்கை வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்ததன் மூலம்  அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.

டிரான்ரல் எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்டோனிக் (Transoral endoscopic transonic)தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த சத்திர சிகிச்சைக்குள்ளான நோயாளி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உடல்நிலை தேறியுள்ளார்.

எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல்,  புற்றுநோய் அகற்றப்பட்ட  இந்த சத்திர சிகிச்சை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சத்திர சிகிச்சையாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.
இது தொடர்பில் தொகுக்கப்பட்ட வீடியோ உங்கள் பார்வைக்கும்..
https://youtu.be/tkuIpQ0jTNI


(வீடியோ இணைப்பு ) முகம்மத் நியாஸ் என்பவரின் நோயை குணப்படுத்தி, இலங்கை வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனை சத்திர சிகிச்சை. (வீடியோ இணைப்பு ) முகம்மத் நியாஸ் என்பவரின் நோயை  குணப்படுத்தி, இலங்கை வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனை சத்திர சிகிச்சை. Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.