வெலிபன்ன (நெடுஞ்சாலை) தொழுகை அறைக்கு எதிராக பிக்குகள்தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபன்ன இடைச்சந்தியருகில் உள்ள
வர்த்தக கட்டிடத் தொகுதியில் அனுமதியின்றி முஸ்லிம்களின் தொழுகை அறை இயக்கப்படுவதாகக் கூறி அங்கு சென்ற பிரதேச பௌத்த துறவிகள் களேபரத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதி வழியாக  கொழும்பு, அளுத்தகம மற்றும் தென் பகுதிக்கு பிரயாணம் செய்யும் முஸ்லிம்களுக்கு வசதியாக வாடகைக்கு எடுக்கப்பட்ட வர்த்தக நிலையத்தை அண்டிய பகுதியில் இவ்வாறு தொழுகை அறை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் இதற்கு முறையான அனுமதியெதுவும் பெறவில்லையெனவும் சமூக நோக்கில் இது இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் இவ்வாறு அனுமதியின்றி வணக்க வழிபாட்டுதளங்களை நடாத்துவதாகக் கூறி பேரகம சுமன தேரர் ஆதரவாளர்களுடன் சென்று அவற்றை கழற்ற நிர்ப்பந்தித்திருந்த நிலையில் அங்கு ஒட்டப்பட்டிருந்த பெயர்ப் பதாதைகள் கழற்றப்பட்டு நிலைமை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  


வெலிபன்ன (நெடுஞ்சாலை) தொழுகை அறைக்கு எதிராக பிக்குகள் வெலிபன்ன (நெடுஞ்சாலை) தொழுகை அறைக்கு எதிராக பிக்குகள்  Reviewed by Madawala News on January 05, 2019 Rating: 5