ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் குமாரவிடம் இருந்து பெறப்பட்டுள்ள குரல்பதிவுகளை ஆராயும் வகையில் பொலிஸ் மா அதிபரின் குரல்பதிவை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் பொலிஸ் மா அதிபரை இன்று காலை 9.30 மணியளவில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பில் நாமல் குமார வழங்கிய குரல் பதிவுகளில் பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவும் உள்ளடங்கியுள்ளனவா என விசாரணை செய்வதற்காவே அவர் இன்று குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.