பானதுறை தொட்டவத்தை (பொலிஸ் - பொதுக்கள் முறுகல்) சுமுக நிலைக்கு திரும்பியது ..பாணந்துறை, தொட்டவத்தை பகுதியில் ஜும்மா தொழுகை நேரத்தில்
பிரதேசத்தின் முஸ்லிம்கள் - பொலிசாரிடையே முறுகல் நிலை தோன்றியிருந்தது.

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 'பள்ளிவாசலுக்கு' சென்ற ஒருவரை பொலிசார் தடுத்ததன் பின்னணியில் உருவான வாய்த்தர்க்கம் முறுகலாக மாறியிருந்ததோடு பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது.

பாணந்துரை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போடப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு இன்று -05- காலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாணந்துரை கெசல்வாத்தை,தொட்டவத்தைப் பிரதேசத்தில் நேற்று ஜும்ஆ தொழுகையுடன் இடம்பெற்ற பதற்ற நிலைமையையடுத்து நேற்றிரவு (04) அப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சம்பவத்தில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
பானதுறை தொட்டவத்தை (பொலிஸ் - பொதுக்கள் முறுகல்) சுமுக நிலைக்கு திரும்பியது .. பானதுறை தொட்டவத்தை  (பொலிஸ் - பொதுக்கள் முறுகல்)  சுமுக நிலைக்கு திரும்பியது .. Reviewed by Madawala News on January 05, 2019 Rating: 5