முஸ்லிம் நபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு.


முஸ்லிம் நபர் ஒருவரை  இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன்
அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர்.

இத்தாக்குதல்தாரிகளில் ஓருவரான  காணி உத்தியோகத்தர் மயூரனுக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது.

02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில்  வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன்  காரணமாக   கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,
கொலை முயற்சியில் ஈடுட்ட ஏனையோரை தேடி பொலிஸார் வலை விரிப்பு.

படத்தில் ஹெல்மேட் அணிந்தவனையும், ஊதா நிற சேட் அணிந்தவனையும் அடையாளம் காட்ட உதவுங்கள்.

065 2240487
முஸ்லிம் நபரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு. முஸ்லிம் நபரை கொலை செய்யும்  முயற்சியில் ஈடுபட்டு மானபங்கமும் படுத்திய  ஏனையோரை தேடி பொலிஸார் வலை வீச்சு. Reviewed by Madawala News on January 08, 2019 Rating: 5