பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக மிகச்சிறந்த பெறுபேற்று சாதனை படைத்த உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம்.


-ஜே.எம். ஹபீஸ்-
இம்முறை வெளியான க.பொ.த. உயர்தர  பரீட்சை பெறுபேறுகளின் படி தெநுவர   கல்வி வலயத்திற்குட்பட்ட
பாடசாலைகளில் மிகச் சிறந்த பெறுபேற்றை  உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம் பெற்றுள்ளது.

இப்பாடசலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில்  13 பேர்  பாடசாலை வரலாற்றில்  முதல் முறையாக  சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்குச் செல்வதற்கான தகுதியை பெற்றுள்ளதாகவும் இது தெநுவர   கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே மிகச்சிறந்த பெறுபேறுகளெனவும் அதிபர் எம்.பீ.எம் சாஜஹான் குறிப்பிட்டார்

மேற்குறிப்பிட்ட மாணவர்களின் மூன்றுபேர் சட்டத்துறைக்கும் ஏனைய துறைகளுக்கு மற்றும் மாணவர்களும்  தெரிவாகியுள்ளதாகவும் மேற்படி மாணவர்ளை​ பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பாது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் அதிபர் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்

அவ்வாறு சித்தி பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு  எம்.எம்.சாஜிதா (3. ஏ.),  எம்.எஸ்.எப்.முபஷ்ஷிரா (3.ஏ),  எம்.எஸ்.எப்.  ரிஸ்லா பானு (2.ஏ.1.பி),  எம்.என்.ஆயிஷா (1.ஏ.1.பி.1.சி.),  M.M.M மர்யம் (2.பி.1.சி),   ஏ.எப்.அப்ரா .(3.பி),  எம்.எப்.என். ஹிதாயா (1.ஏ.2.பி),     ஏ.எஸ்.எப். சரீபா (3.பீ),    எம்.எம்.எப்.நஸ்மிலா (1.ஏ.1.பி.1.சி),  எம்.என்.நுஹா  (1.பி .2.சி),  எம்.ஏ .பாத்திமா ரிஸ்லா (3.பீ), எம்.ஏ.எப். ஸால்பா.(1.பி.2.சி), எம்.எஸ்.செய்னப் (3.சீ). ஆகிய மாணவர்களே பல்கலை கழகத்திற்கு தகுதி பெற்றவர்களாவர்
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக மிகச்சிறந்த பெறுபேற்று சாதனை படைத்த உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம்.  பாடசாலை வரலாற்றில்  முதல் முறையாக மிகச்சிறந்த பெறுபேற்று சாதனை படைத்த உடுநுவர அறபா முஸ்லிம் மகா வித்தியாலயம். Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.