அலவத்துகொடை - இயால்காமம் மக்கள் சத்தியகிரக போராட்டத்தில். (படங்கள்)


 (மொஹொமட்  ஆஸிக்)​​
அக்குறணை பிரதேச சபையினால் அலவத்துகொடை இயால்காமம்
 பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் கொம்போஸ்ட் தயாரிக்கும் நிலையத்திறகும் அங்கு குப்பைகளை குவிப்பதற்கு எதிர்ப்பை தெரிவித்து  அப் பிரதேச மக்கள் எதிர்ப்பு சத்திய கிரகா போராட்டம் ஒனறில் ஈடு பட்டுவருகின்றனர்.


இப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில் இவ் விடத்தில் குப்பைகளை குவிப்பதினால் சுமார 200 க்கும் மேற் பட்ட குடும்பஙகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் வீடுகளில் சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு ஈக்கள் பரவி வருவதாகவும் தெரிவித்தனர்.


இவ்விடத்திள் குப்பைகளை கொட்டி கொம்போஸ்ட் தயாரிப்பதாக கூறிப்பட்டாலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளில்  சிறிய ஒரு பகுதியே கொம்போஸ்ட் தயாரிப்பதற்காக பயன்படுத்தப் படுவதாகவும்  ஏனைய குப்பைகள் பழுதடைந்து பாரிய சுற்றாடல் பிரச்சினையை தோற்றிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதேநேரம் இப் பிரதேசத்தில் இயங்கி வந்த பாலர் பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் பல கினறுகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இவ் விடத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தும் வரை தாம்போராட்டத்தை கைவிட போவதவில்லை  என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


எதிர்ப்பு சத்தியகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை  நடாத்தி இப் பிரச்சினையை சுமூகமாய தீர்த்து வைப்பதற்காக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஐ.எம்.இஸ்திஹார் உற்பட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நெற்று 09 ம் திகதி மாலை அங்கு சென்றுடன் அங்கு பிரதேச சபை தலைவர் ஐ.எம்.இஸ்திஹார்  இவ்வாறு தெரிவித்தார்.


இயால்காம்  பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வருவது குப்பை குழியல்ல. இது ஒரு வேலைத்திட்டம் .கொம்போஸ்ட் தயாரிப்பதற்காக மத்திய அரசாங்கம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் இதனை நிர்மானித்துள்ளது. இருந்த போதும் இங்கு சில பிரச்சினைகள் இருப்பதாக நான் அறிந்தேன். அப பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கோள்ள உள்ளேன். இது ஒருதேசிய மட்ட வேலைத் திட்டம் என்பமால் இதனை முற்றாக மூடிவிட முடியாது. இருந்த போதும் இவ்விடத்தில் சிறந்த ஒரு சுற்றாடலை உறுவாக்கி அனைவருக்கும் சுற்றாடலையும் சுகாதாரத்தையும் பாதுகாக்கக’ கூடிய விதத்தில் அதனை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதோடு கொம்போஸ்ட் தயாரிப்பதற்கு மட்டும் தேவையான கழிவுப் பொருட்ளை இங்கு வைத்து விட்டு மிகுதியாகும் ஏனைய அனைத்து கழிவுப் பொருட்களையும் இரு வாரங்களுக்குள் இவ் விடத்தை விட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இருந்த போதும் இத் தீர்மானத்திற்கு பிரதேச மக்கள் இனங்காதததினால் பேச்சுவார்​த்தை இனக்கமிள்றி முடிவடைந்தது.

அலவத்துகொடை - இயால்காமம் மக்கள் சத்தியகிரக போராட்டத்தில். (படங்கள்) அலவத்துகொடை -  இயால்காமம் மக்கள் சத்தியகிரக போராட்டத்தில். (படங்கள்) Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.