கட்டாரில் தொழில் புரியும் சொந்தங்களால் 24 இலட்சம் ரூபா நிதியுதவியில் உருவான பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு.


முள்ளிப்பொத்தானை:- றியால்தீன்
கட்டாரில் வாழும் இலங்கையர்களினால் அமைக்கப்பட்ட SLQF அமைப்பின்
நிதியுதவியில் சேருவில கவந்திஸ்ஸபுர வித்தியாலயத்திக்கு 24 இலட்சம் ரூபா செலவில் பாடசாலையில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து கொடுக்கும் முகமாக பாடசாலையில் புதிதாக கட்டடத்தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டடத் தொகுதியினை மாணவர்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் சரத் பண்டார தலைமையில் இன்று நடைபெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கந்தளாய் பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேருவில பிரதேச சபை தவிசாளர் ரணசிங்க பண்டார, பிரதேச சபை உறுப்பினர்கள், சேருவில பொலிஸ் அதிகாரிகள், பௌத்த மத குருமார்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், மாணவர்கள், எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கட்டாரில் தொழில் புரியும் சொந்தங்களால் 24 இலட்சம் ரூபா நிதியுதவியில் உருவான பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு. கட்டாரில் தொழில் புரியும் சொந்தங்களால்  24 இலட்சம் ரூபா நிதியுதவியில்  உருவான  பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு. Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.