ஏழ்மையிலும் நேர்மை... பலரையும் நெகிழவைத்த சம்பவம்.


மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல்
வெளியாகியுள்ளது.

பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பொருட்களை தொலைத்த நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த செயற்பாடு குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் கதிர்காமத்தில் இருந்து கெகனதுரே பிரதேசத்திற்கு சென்ற எனது தங்கை தனது பையை தொலைத்து விட்டார். அதில் பெறுமதியான நகை, பணம், அடையாள அட்டை, கடன் அட்டை உட்பட பல முக்கியமான பொருட்கள் காணப்பட்டன.

எவ்வளவு தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மனதை சமாதானப்படுத்தி கொண்டு தேடும் நடவடிக்கையை கைவிட்டோம்.

இந்நிலையில் நேற்று காலை கடிதம் ஒன்று கிடைத்தது. அடையாள அட்டை ஆவணங்களை பெற்றுக் கொள்ள வருமாறு விலாசம் குறிப்பிடப்பட்டது.

அதில் பெயர், தொலைபேசி இலக்கம் ஒன்றும் காணப்படவில்லை. பணம் நகை அனைத்தையும் எடுத்து கொண்டு அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை மாத்திரம் யாரோ விட்டு சென்றுள்ளார்கள் என நாங்கள் நினைத்தோம்.

பரவாயில்லை என நினைத்து அவ்விடத்திற்கு சென்ற போது கடை நடத்து ஒருவர் பையை எங்களிடம் கொடுத்தார். அதில் அனைத்து பொருட்களும் அப்படியே காணப்பட்டன.

கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மனிதாபிமானம் குறித்து கூற வார்த்தையில்லை. அதில் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் காணப்பட்டன.

அதனை எடுத்தவர்கள் வைத்து கொள்ள முடியும்...
ஆனால்திருப்பி கொடுத்தவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர். மற்றவர்களின் கழுத்தில் இருப்பதனை பறித்து செல்லும் மக்கள் மத்தியில் இந்த குடும்பத்தினரை பாராட்ட வார்ததைகள் இல்லை” என தெரிவித்தனர்.
ஏழ்மையிலும் நேர்மை... பலரையும் நெகிழவைத்த சம்பவம். ஏழ்மையிலும் நேர்மை... பலரையும் நெகிழவைத்த சம்பவம். Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.