மலேசியா பொலிஸார் கைது செய்த 24 இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ்மா அதிபர் முகமட் ஹரூன்....


மலேசியாவிலிருந்து  அவுஸ்திரேலியா நியுசிலாந்திற்கு ஆட்களை கடத்தும்  நடவடிக்கைகளில் ஈடுபட்ட
 இலங்கையர்களை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள மலேசியா பொலிஸார் இவர்களிடமிருந்து 24 இலங்கையர்கள் உட்பட 34 பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

மலேசிய பொலிஸ்மா அதிபர்டன் சிறி முகமட் பியுஜி ஹருன் இதனை அறிவித்துள்ளார்

மீட்கப்பட்டுள்ளவர்களில்  எட்டு பெண்கள் உட்பட 24 இலங்கையர்களும் 10 இந்திய பிரஜைகளும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்து தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்களை கைதுசெய்துள்ளோம் இவர்களே ஆள்கடத்தலில் ஈடுபட்டனர் என  சந்தேகிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர்கள் படகொன்றை கொள்வனவு செய்துள்ளமையும் மூன்று படகு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது எனவும் மலேசிய பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.


இவர்கள் நியுசிலாந்து அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் 2018 நடுப்பகுதி முதல்  மலேசியாவை தளமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முறியடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மலேசியா பொலிஸார் கைது செய்த 24 இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ்மா அதிபர் முகமட் ஹரூன்.... மலேசியா பொலிஸார் கைது செய்த  24 இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ்மா அதிபர் முகமட் ஹரூன்.... Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.