பொதுமக்களால் பிடிக்கப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு .


பொகவந்தலாவை,  கிலானி தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்திலிருந்து,
நேற்று முன்தினம் இரவு, 12 அடி நீளமான மலைப்பாம்​பொன்று பிடிக்கப்பட்டு, நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிலானி தோட்ட கோவிலில் இடம்பெற்ற பூஜையில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பொதுமக்கள், மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு, பொகவந்தலாவ நகரத்துக்கு வேறோரு தேவை நிமித்தம் வருகைத் தந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அது சிவனொளிபாத மலை காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு . பொதுமக்களால் பிடிக்கப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு . Reviewed by Madawala News on January 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.