120 வீடுகள், பள்ளிவாசல், பொது மண்டபம் கொண்ட வீடமைப்பு திட்டம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.


மன்னார் - தலை மன்னாரில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் மக்களின் பாவனைக்கு
வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடுகள் அமைச்சர் ரிஷாத்  பதியுதீன் தலைமையில் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளன.

சாயிட் சிட்டி எனும் இவ் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கிராமாத்தில் பள்ளிவாசல், 120 வீடுகள் மற்றும் பொது மண்டபம் என்பன றிஸாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

டுபாய் நாட்டின் தனவந்தர் அப்துல் ரஹீம் பத்ஹ் அலி அப்துல்லாஹ் அல்காஜாவின் நிதி உதவியுடன் இவ்வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், டுபாய் நாட்டின் தனவந்தர் தலைமையிலான குழுவினர், அமைச்சரின் பிரத்யேக செயலாளர் றிப்கான் பதியுதீன், அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

120 வீடுகள், பள்ளிவாசல், பொது மண்டபம் கொண்ட வீடமைப்பு திட்டம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. 120 வீடுகள், பள்ளிவாசல், பொது மண்டபம் கொண்ட வீடமைப்பு திட்டம் அமைச்சர் ரிஷாத்  பதியுதீன் தலைமையில் மக்களுக்கு  கையளிக்கப்பட்டது. Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.