1 மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட போலி நாணயத் தாள்களுடன் 18 பேர் சிக்கினர்.. #கண்டி பிரதேசத்தில் சம்பவம்.


ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட 3 போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த
18 பேரும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த 18 பேரும் அம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபர்கள் வசமிருந்து, ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட மூன்று போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் திருகோணமலை, புத்தளம், கந்தலாய், எல்ப்பிட்டி, கொழும்பு, றாகமை, கனேமுல்லை மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
1 மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட போலி நாணயத் தாள்களுடன் 18 பேர் சிக்கினர்.. #கண்டி பிரதேசத்தில் சம்பவம். 1  மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட போலி நாணயத் தாள்களுடன்  18 பேர் சிக்கினர்.. #கண்டி பிரதேசத்தில் சம்பவம். Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5