சமய நல்லிணக்கத்தை சர்வமத தலைவர்கள் ஊடாக ஏற்படுத்த முடியும்.


-ஹஸ்பர் ஏ ஹலீம்-
இலங்கை நாட்டில் மூவினங்களுக்குள் சர்வ மதங்கள் ஊடாக சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே
எமது  நோக்கம் என காலி கன்னம்பிட்டிய பௌத்த விகாரையின்  விகாராதிபதி கேகல்ல யூ பன்ஞராம தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட சர்வமத தலைவர்களுடனான நேற்று செவ்வாய்க் கிழமை மாலை (11) காலி கன்னம்பிட்டிய  விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சமய நல்லிணக்கத்தையே நாங்கள் விரும்புகிறோம் ஒவ்வொரு மதமும் நல்ல விடயங்களையே போதனைகளாக தங்களது மதங்கள் ஊடாக சொல்கிறது .

 சமாதானத்தை நிலை நாட்ட தெற்கு மாகாணத்தில் மாத்திரமல்ல வட கிழக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்வ மத கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறேன்.

 யுத்த காலங்களில் இருந்து திருகோணமலை மாவட்டம் போன்ற பிரதேசங்களில் களவிஜயம் செய்து சமய பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளை சர்வமத தலைவர்களுடன் சேர்ந்து தீர்வை முன்னெடுத்திருக்கிறோம்.

காலியில் அன்றைய ஆரம்ப காலத்திலேயே சர்வமத தலைவர்கள் ஆரம்பம் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டதை.

அன்றைய கால கட்டத்தில் முஸ்லீம் சிங்களவர்கள் இடையில் இனக் கலவரம் ஏற்படுத்தப்பட்டது இதனை தான் விரும்பவில்லை சமாதான பேச்சுவார்த்தைக்கு இட்குச் செல்லவே பாடுபட்டு வந்த தருணமே தன்னையை தனது மக்கள் இரானுவத்தினரிடம் பிடி கொடுத்து கொலை செய்ய முயற்சித்து விடுதலை செய்தார்கள் ..

தர்மம் செய்து வந்ததனால் உயிரை பணயம் வைத்து தப்பி விட்டேன்.

மூவின மக்களும் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இவ்வாறான சர்வமத தலைவர்கள் இதற்காக பூரண ஒத்துழைப்புக்களுடன் செயற்பட முன்வருவார்கள் என நம்புகிறேன் என்றார்
சமய நல்லிணக்கத்தை சர்வமத தலைவர்கள் ஊடாக ஏற்படுத்த முடியும். சமய நல்லிணக்கத்தை சர்வமத தலைவர்கள் ஊடாக ஏற்படுத்த முடியும். Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.