பாடசாலைப் புத்தகங்களுக்கான நவீன மாற்றீடு ... அக்குரணை யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் Tab மூல கல்வி அறிமுகம்.


இன்றைய உலகில் நவீன தொழில்நுட்பங்கள் வெவ்வேறு துறைகளில் ஆதிக்கம்  செலுத்துகின்றன.


கல்வித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. பல தசாப்தங்களாக கிட்டத் தட்ட ஒரே முறையிலமைந்த கற்றல் கற்பித்தல் முறைகளில் பெருமளவு மாற்றங்கள் தற்போது உருவாகி வருகின்றன. வளர்ந்த நாடுகளில் அவ்வாறான மாற்றங்கள் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டும் வருகின்றன.


நவீன தொழில்நுட்பத்தினூடான கற்றல் கற்பித்தல் முறைகளில் ஈ- லேனிங் , ஒன்லைன் லேனிங் , ஸ்மார்ட் கிளாஸ்ரூம் முதலிய கோட்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


கண்டி அக்குரணையில் அமைந்துள்ள யகீன் மொடல் ஸ்கூல் , மற்றும் அதன் பெண்கள் பிரிவாகிய நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகள் நவீன தொழிநுட்பங்களை அறிமுகம் செய்வதில் முன்னிலை வகிக்கின்றனர்.


இப்பாடசாலைகளில்  6ம் தரத்திலிருந்து 11ம் தரம் வரை ஏராளமான பாடங்கள் ஈ-லேனிங் முறை மூலமாகக் கற்பிக்கப்படுகின்றன.

 இதற்காக இதுவரை சுமாராக 650 பாடங்கள் மாணாக்கரின் ஆற்றல் , உளவியல், தேவை மற்றும் பாட இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இப்பாடசாலைகளில் மட்டுமே இவ்வாறாக ஈ-லேனிங் கற்பித்தல் முறை பெருமளவாக அமுல்செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


அடுத்த வருடத்திலிருந்து இப்பாடசாலைகளில் பாடப் புத்தகங்களுக்குரிய பிரதியீடாக TAB கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த டப்கள் மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்கள், அகராதி, பொது அறிவு, வாசிப்பை ஊக்குவிக்கும் மென்பொருட்கள், கணிதம் சம்பந்தமான விளையாட்டுக்கள் போன்ற ஏராளமான பயன்தரும் உள்ளடக்கங்களை உடையவையாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் TAB உடன் சாக்லெய்ன் முஸ்தாக்
அண்மையில் இந்த டப் (TAB) வகுப்புக்களின் அங்குரார்ப்பண நிகழ்வு நிஸ்வான் மொடல் ஸ்கூலில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இங்கிலாந்து தேசிய அணியின் தற்போதைய சுழற்பந்து விசேட பயிற்றுவிப்பாளருமாகிய சாக்லெய்ன் முஸ்தாக் கலந்து கொண்டார். இங்கு உறையாற்றிய அவர் நான் இங்கிலாந்தில் வாழ்ந்த 19 வருட காலத்தில் அங்கு ஏராளமான பாடசாலைகளுக்கு விஜயம் செய்துள்ளேன். இன்று யகீன் மொடல் ஸ்கூலில் நடைபெறும் நான் காண்கின்ற முன்னேற்றகரமான பல விடயங்கள் இப்பாடசாலை அவை எவற்றுக்கும் சளைத்ததல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது எனக் கூறினார்.


இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இப்பாடசாலைகளில் ஒன்லைன் லேனிங் , மற்றும் ஒன்லைன் பரீட்சைகள் என்பன அறிமுகம் செய்யப்படவுள்ளன என யகீன் குழுமத்தின் தலைவர் பஹ்மி பாரூக் எமது இணையத் தளத்திடம் தெரிவித்தார்.


யகீன் மற்றும் நிஸ்வான் பாடசாலைகளில் இலங்கையின் அரச பாடத்திட்டம் ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கப்படும் அதே வேளை புனித அல்குர்ஆன் மனன வகுப்புக்களும் பாடசாலையிலேயே நடைபெறுகின்றன. மேலும் இவ்விரு பாடசாலைகளும் யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவன நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.
பாடசாலைப் புத்தகங்களுக்கான நவீன மாற்றீடு ... அக்குரணை யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் Tab மூல கல்வி அறிமுகம். பாடசாலைப் புத்தகங்களுக்கான நவீன மாற்றீடு ... அக்குரணை யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் Tab மூல கல்வி அறிமுகம். Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.