மாணவனை நிலத்தில் தூக்கி அடித்த சக மாணவன்.. கொழும்பு பாடசாலை மாணவனுக்கு விளக்கமறியல் .


கொழும்பில் அமைந்துள்ள தனியார்பாடசாலையொன்றில், சாதாரண விளையாட்டு ஒன்றின் போது
இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது முற்றிய நிலையில் சக மாணவன் மீது கதிரையை எறிந்து, குறித்த மாணவனை  நிலத்தில் தூக்கி அடித்த மாணவனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று (4) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 19 வயது மாணவனின் முதுகெலும்பு உடைந்திருக்குமாயின் அது விலை மதிப்பிட முடியாதென தெரிவித்த நீதிவான் , சந்தேகநபரான மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவனின் முதுகெலும்பு உடைந்துள்ளதா என்பது தொடர்பில், வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்
மாணவனை நிலத்தில் தூக்கி அடித்த சக மாணவன்.. கொழும்பு பாடசாலை மாணவனுக்கு விளக்கமறியல் . மாணவனை  நிலத்தில் தூக்கி அடித்த சக  மாணவன்.. கொழும்பு பாடசாலை மாணவனுக்கு விளக்கமறியல் . Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.