BREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது .


பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பை இன்று மாலை 4 மணிக்கு வெளிவரும் என அறிவிக்கபட்டது அனைவரும் அறிந்ததே..

பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது எனவும் ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது  எனவும்  உயர் நீதிமன்றம் சற்றுமுன்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. 

அதனடிப்படையில் குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 

இதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
BREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது . BREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது . Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.