மோடி அரசின் பசு பாதுகாப்புத்துறை அமைச்சர், சுயேச்சை வேட்பாளரிடம் பரிதாபமாக தோல்வி.

இந்தியாவில், 
ராஜஸ்தானில் பசு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்துவந்த ஓட்ராம் தேவசி சுயேச்சை
வேட்பாளரிடம் பரிதாபமாக தோற்றுப் போனார்.

பசு பாதுகாப்புத்துறை அமைச்சர்

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. 

ராஜஸ்தானில் மாட்டிறைச்சிக்குத் தடை உள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களை பசுக் காவலர்கள் சென்று தாக்குவது இங்கே வாடிக்கை. ஒருமுறை இரவில் கழுதைகள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. காவலர்களுக்கு யாரோ.. மாடுகளைக் கடத்தி செல்லப்படுவதாகத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அந்த வாகனத்தை விரட்டிச் சென்று நிறுத்தினர். 


வாகனத்தின் உள்ளே கழுதைகள் இருப்பதைக் கண்டு பசுக்காவலர்கள் அங்கிருந்து ஓடிய கூத்தும் நடந்தது.


 மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அப்பாவிகளையும் இவர்கள் தாக்கி துன்புறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், ராஜஸ்தானில் பசுக்களைக் காக்க தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. இந்த துறை அமைச்சரின் பெயர் ஓடராம் தேவசி. இவர்தான் இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை அமைச்சர். 


 ராஜஸ்தான் தேர்தலில் ஓடராம், சிரோகி என்ற தொகுதியில் போட்டியிட்டார். சிரோகி தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சன்யம் லோதா 10,253 வாக்குகள் வித்தியாசத்தில் ஓட்ராம் தேவசியை தோற்கடித்தார்.

 தேவசி 71,019 வாக்குகள் பெற சன்யம் லோதா 81,272 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். ராஜஸ்தான் தேர்தலில் 13 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். 

அதில், ஓடராம் தேவசி முக்கியமானவர். இந்தியாவிலேயே ராஜஸ்தானில் மட்டும்தான் இதற்கென்று அமைச்சகம் இருந்தது. 

இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை அமைச்சரின் தோல்வி பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒரு தரமான சம்பவம்.

—நன்றி  :  விகடன்—
மோடி அரசின் பசு பாதுகாப்புத்துறை அமைச்சர், சுயேச்சை வேட்பாளரிடம் பரிதாபமாக தோல்வி. மோடி அரசின் பசு பாதுகாப்புத்துறை அமைச்சர்,   சுயேச்சை வேட்பாளரிடம் பரிதாபமாக தோல்வி. Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.