நான் ஏன் பிரதமர் பதவியை ஏற்றேன்... மஹிந்த ராஜபக்ஷ விளக்கம்.


நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பது பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு
விதிக்கப்பட்டதாலேயே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் செயற்பாட்டை நிறுத்தும் நோக்கத்திலேயே தான் பிரதமர் பதவியை ஏற்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாடு இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலமை மற்றும் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நான் ஏன் பிரதமர் பதவியை ஏற்றேன்... மஹிந்த ராஜபக்ஷ விளக்கம். நான் ஏன் பிரதமர் பதவியை ஏற்றேன்... மஹிந்த ராஜபக்ஷ விளக்கம். Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5