வாக்குகளுக்காக கப்பம் கொடுக்கும் அரசியல்வாதியாக ஒருபோதும் செயற்பட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் சுபையிர்



தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக கப்பம் கொடுக்கும்
அரசியல் வாதியாக ஒரு போதும் செயற்படமாட்டேன் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தை பிரதான வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அப்துல் மஜீத் மாவத்தையின் பிரதான வீதி நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. அதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்தனர். குறித்த வீதியினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு,  நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இருந்த போதிலும் அப்துல் மஜீத் மாவத்தையின் பிரதான வீதியின் அவல நிலையினை நான் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர் அவ்விடயத்தினை கருத்திற்கொண்டு அவ்வீதியினை அபிவிருத்தி செய்வதற்காக சுமார் ஒரு கோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அதற்காக கிழக்கு மாகாண ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

குறிப்பாக கடந்த காலங்களில் நடைபெற்ற நான்கு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கின்றேன். ஒவ்வொரு தேர்தல்களிலும் என்னை தேற்கடிப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள் இறைவனின் துணையால் அத்தனை தடைகளையும் தாண்டி வெற்றிபெற்றேன். அதனூடாக எனக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி மக்களுக்கு பணி செய்தேன்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிட்டேன். குறிப்பாக அதிலும் என்னை திட்டமிட்டு தோற்கடிப்பதற்காக எனது வட்டாரத்தில் கோடிக்கணக்கான பணங்களை செலவிட்டனர். அன்பளிப்புக்களையும் அள்ளி வீசினர். இருந்த போதிலும் அவ்வாறான சலுகைகளுக்கு சோரம் போகாது, அப்பகுதி மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நான் ஒருபோதும் நிதிகளையோ, பொதிகளையோ வழங்கவில்லை. மக்களின் வாக்குகளை சூறையாடவுமில்லை. அவ்வாறான அசிங்கமான அரசியலை செய்த வரலாறும் கிடையாது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மக்களுக்கு பணி செய்தே வெற்றிபெற்றேன். அந்தவகையில் ஜனநாயக ரீதியில் மக்களுடைய வாக்குகளை பெற்றவன் என்ற வகையில் சந்தோசமடைகின்றேன்.

குறிப்பாக எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி சூழ்நிலையில் தேர்தல் ஒன்று நடைபெறும் சாத்தியங்கள் காணப்பட்ட போது எமது பிரதேசத்திலே இருக்கின்ற சில அரசியல் வாதிகள் நிவாரணம் எனும் போர்வையில் பொதிகளை வழங்க ஆரம்பித்தனர். தேர்தல் இல்லை என்றதும் நிவாரணம் வழங்கும் பணிகளை நிறுத்திவிட்டனர்.

எமது பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களையும் சாதகமாக பயன்படுத்தி நிவாரணம் எனும் போர்வையில் கப்பம் வழங்கப்படகிறது. இது தேர்தல் ஒன்றினை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு நாடகமாகும். அத்துடன் இது ஏழை மக்களை ஏமாற்றி அவர்களின் ஜனநாயக உரிமையை சூறையாடும் நடவடிக்கையாகும். இதுதொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அதிகாரம் இருந்த போது மக்களை புறந்தள்ளி பாரபட்சமாக செயற்பட்டவர்கள். தேர்தல் என்றதும் நிவாரணம் வழங்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் தமது பண பலத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்தும் பொதிகளை வழங்கி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர். எனவே, இந்த விடயத்தில் பொதுமக்கள் மிகவும் விழப்புடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக தேர்தல் வருகின்ற போது அதிகாரத்திற்காக யார், யாருக்கு, எச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிவாரணப் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்பதனை ஒவ்வொருவரும் என்னிப்பார்க்க வேண்டும்.

நான் அதிகாரம் இல்லாத போதும்; இப்பிரதேச மக்களின் நன்மை கருதி பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். மேலும் எதிர்காலத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்குகளுக்காக கப்பம் கொடுக்கும் அரசியல்வாதியாக ஒருபோதும் செயற்பட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் சுபையிர் வாக்குகளுக்காக கப்பம் கொடுக்கும் அரசியல்வாதியாக ஒருபோதும் செயற்பட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் சுபையிர் Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.