பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் ஒழிப்பு பேரணி



(றியாஸ் ஆதம்)
உலக புகைத்தல் தினத்தினை முன்னிட்டு “புகைத்தலும், இருதய நோயும்” எனும் தொனிப்பொருளில்
புகைத்தலை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டத்திற்கினங்க பொத்துவில் ஆதார வைத்தியசாலை மற்றும் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் புகைத்தல் ஒழிப்பு பேரணி இன்று (18) பொத்துவிலில் இடம்பெற்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.ஏ.சீ.அஹமட் நசீல், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.இஸ்ஸதீன், பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.அன்வர் சதாத், உட்பட திணைக்களத் தலைவர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பொலிசார், பாதுகாப்பு படையினர், பொது அமைப்புக்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், ஆட்டோ சங்கத்தினர், வெற்றிப்பாதை குழுவினர், வை.எம்.எம்.ஏ, முஸ்லிம் லீக், உட்பட பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த புகைத்தல் ஒழிப்பு தினப் பேரணியானது காலை 6மணியளவில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து, முர்சானாச் சந்தி, தாயார் வீதி ஹாபீஸ் மதரசா ஊடாக பிரதான வீதியை வந்தடைந்து, மீண்டும் பொத்துவில் வைத்தியசாலையை வந்தடைந்தது. பேரணியில் கலந்துகொண்வர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு சென்றனர். இதன்போது நடை பவணி, சைக்கிள் பவணி மற்றும் வீதி நாடகம், என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும்; கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினதும் அனுசரணையுடன், இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று காலை பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புகைத்தல் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் ஹாரிஸ், பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.இஸ்ஸதீன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தார். இதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் ஒழிப்பு பேரணி பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் புகைத்தல் ஒழிப்பு பேரணி Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.